• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    #BREAKING இனி அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம்... மகளிருக்கு மாஸ் அறிவிப்பை வெளியிட்ட சி.எம்.விஜய்...!

    மகளிர் இலவச பயண திட்டம் குறித்து முதலமைச்சர் 110 விதிகளின் கீழ் இன்று சட்டப்பேரவையில் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
    Author By Amaravathi Mon, 24 Aug 2026 10:09:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM Vijay free bus announcement

    தமிழக சட்டசபை கடந்த 2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் கூடியது. கூட்டம் தொடங்கியதும் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழக மகளிரின் நீண்ட நாள் எதிர்ப்பான அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிர் விடியல் பயணம் திட்டம் தற்போது தவெக ஆட்சியிலும் தொடர்ந்து வரும் நிலையில், அத்திட்டத்தை  “வெற்றி பயணம் திட்டம்” என்ற பெயரில் விரிவுபடுத்துவதாக சி.எம்.விஜய் அறிவித்துள்ளார். சாதாரண பேருந்து மட்டுமல்ல எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ் பேருந்துகளிலும், மாவட்டங்களுக்கு இடையில் பயணம் மேற்கொள்ள சாதாரண பேருந்துகளிலும் இலவசம் என்றும், மகளிருக்கான பேருந்து பயணத்திற்கு வருமான உச்ச வரம்போ, பயணங்களில் எண்ணிக்கை கட்டுப்பாடோ இல்லை என்றும் அறிவித்துள்ளார். 

    110 விதிகளின் கீழ் சி.எம்.விஜய் உரையாற்றியதாவது: ஒரு மாநிலத்தின் உண்மையான முன்னேற்றம் என்பது அதன் பொருளாதார வளர்ச்சியால் மட்டுமல்ல, பெண் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், வணிகம் மற்றும் சமூக வாழ்வின் அனைத்து தளங்களிலும் பெண்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பங்கேற்கும் வாய்ப்புகளாலும் அளவிடப்படுகிறது.

    மகளிரின் பயண சுதந்திரம், அவர்களின் பொருளாதார சுதந்திரத்திற்கும் குடும்பங்களின் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக இருக்கிறது. தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டத்தில், மாநகரம் மற்றும் நகர்ப்புறங்களில் சாதாரண மற்றும் மலைப்பகுதி பேருந்துகளில் 40 கிலோமீட்டர் வரை மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுவதில்லை.

    தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு மகளிரும் போக்குவரத்துக் கட்டணத்தால் தமது வாய்ப்புகளை இழக்கக் கூடாது என்ற சமூகநீதி சிந்தனையை இவ்வரசு முதன்மையாகக் கொண்டுள்ளது.

    இதனைக் கருத்தில் கொண்டு, மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, பெருமளவில் பயனளித்திடும் விதமாக “வெற்றி பயணம்” என்ற பெயரில், தேசத் தந்தை மகாத்மா காந்தி அடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி முதல் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என்பதை இந்த மாமன்றத்தில் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.

    அதன்படி, முதல் கட்டமாக மாநகரம் மற்றும் நகரங்களில் சாதாரண பேருந்துகள் மட்டுமின்றி, மாநகர மற்றும் நகரப் பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசு பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணங்களை மேற்கொள்ளலாம்.

    மேலும், மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக, புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் சாதாரண கட்டணப் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணங்களை மேற்கொள்ளலாம்.

    இத்திட்டத்தில் பயன்பெற வருமான உச்சவரம்போ அல்லது மேற்கொள்ள விரும்பும் பயணங்களின் எண்ணிக்கையிலோ கட்டுப்பாடுகள் இல்லை. “வெற்றி பயணம்” திட்டம் ஏனைய சேவைகளிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

    இதன் மூலம் மாநிலம் முழுவதும் மகளிருக்கான எளிதில் அணுகக்கூடிய பொதுப் போக்குவரத்து வசதி பெருமளவில் கிடைக்கும். இதன் மூலம் மாணவிகள் தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லவும், பணியிடங்களுக்குச் செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காகவும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க இயலும்.

     “வெற்றி பயணம்” என்பது கட்டணமில்லா ஒரு பேருந்துப் பயணம் மட்டுமல்ல. ஒரு மாணவியின் கல்வி, ஒரு தொழிலாளியின் வேலைவாய்ப்பு, ஒரு தாயின் குடும்பப் பொறுப்பு, ஒரு தொழில் முனைவோரின் முன்னேற்றம் போன்றவற்றை உறுதி செய்யும் சமூக முதலீடாகும்.

    தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும், மகளிரின் இயக்க சுதந்திரத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் அரசு உறுதுணையாக இருக்கும்.

    இத்திட்டத்தின் கீழ் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் கட்டணமில்லா பயணங்களை மேற்கொள்ளலாம்.

    “வெற்றி பயணம்” வழியாக மகளிரின் வாய்ப்புகள் விரிவடைந்து, குடும்பங்கள் முன்னேறி, சமூகநீதியும் சமத்துவமும் நிலைபெற்று, வளமான வெற்றி தமிழ்நாட்டை உருவாக்கும் நமது பயணம் மேலும் வலுப்பெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஆண்டுதோறும் தோராயமாக ஆயிரம் கோடி ரூபாய் செலவினம் ஏற்படும்.

    மேலும் படிங்க
    மீண்டும் வெப்சீரிஸ் மீது ஆர்வம் காட்டும் திரிஷா.!! சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் கதையாம்.. ஆர்வத்தில் இளசுகள்..!

    மீண்டும் வெப்சீரிஸ் மீது ஆர்வம் காட்டும் திரிஷா.!! சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் கதையாம்.. ஆர்வத்தில் இளசுகள்..!

    சினிமா
    அநாகரிக விமர்சனம்..! ஆடை விவகாரத்தில் அமைச்சர் கீர்த்தனாவுக்கு கனிமொழி எம்பி சப்போர்ட்..!!

    அநாகரிக விமர்சனம்..! ஆடை விவகாரத்தில் அமைச்சர் கீர்த்தனாவுக்கு கனிமொழி எம்பி சப்போர்ட்..!!

    தமிழ்நாடு
    ‘Economic D-Day’! அதிபர் டிரம்பின் அடுத்த அதிரடி! ஈரானின் பணப்புழக்கத்தையே முடக்க தயாராகும் அமெரிக்கா?

    ‘Economic D-Day’! அதிபர் டிரம்பின் அடுத்த அதிரடி! ஈரானின் பணப்புழக்கத்தையே முடக்க தயாராகும் அமெரிக்கா?

    உலகம்
    ‘ஒரு சொட்டு எண்ணெய்கூட போகாது’!ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போகிறதா ஈரான்? பகீர் மிரட்டல்!

    ‘ஒரு சொட்டு எண்ணெய்கூட போகாது’!ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போகிறதா ஈரான்? பகீர் மிரட்டல்!

    உலகம்
    தவெக அரசுக்கு எதிராக களமிறங்கிய விவசாயிகள்... தரையில் பாலைக் கொட்டி போராட்டம்...!

    தவெக அரசுக்கு எதிராக களமிறங்கிய விவசாயிகள்... தரையில் பாலைக் கொட்டி போராட்டம்...!

    தமிழ்நாடு
    வாரத்தின் முதல் நாளே ஆட்டம் காட்ட தொடங்கிய தங்கம் விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    வாரத்தின் முதல் நாளே ஆட்டம் காட்ட தொடங்கிய தங்கம் விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி

    செய்திகள்

    அநாகரிக விமர்சனம்..! ஆடை விவகாரத்தில் அமைச்சர் கீர்த்தனாவுக்கு கனிமொழி எம்பி சப்போர்ட்..!!

    அநாகரிக விமர்சனம்..! ஆடை விவகாரத்தில் அமைச்சர் கீர்த்தனாவுக்கு கனிமொழி எம்பி சப்போர்ட்..!!

    தமிழ்நாடு
    ‘Economic D-Day’! அதிபர் டிரம்பின் அடுத்த அதிரடி! ஈரானின் பணப்புழக்கத்தையே முடக்க தயாராகும் அமெரிக்கா?

    ‘Economic D-Day’! அதிபர் டிரம்பின் அடுத்த அதிரடி! ஈரானின் பணப்புழக்கத்தையே முடக்க தயாராகும் அமெரிக்கா?

    உலகம்
    ‘ஒரு சொட்டு எண்ணெய்கூட போகாது’!ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போகிறதா ஈரான்? பகீர் மிரட்டல்!

    ‘ஒரு சொட்டு எண்ணெய்கூட போகாது’!ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போகிறதா ஈரான்? பகீர் மிரட்டல்!

    உலகம்
    தவெக அரசுக்கு எதிராக களமிறங்கிய விவசாயிகள்... தரையில் பாலைக் கொட்டி போராட்டம்...!

    தவெக அரசுக்கு எதிராக களமிறங்கிய விவசாயிகள்... தரையில் பாலைக் கொட்டி போராட்டம்...!

    தமிழ்நாடு
    வெங்காய விலை தாறுமாறு உயர்வு! களத்தில் இறங்கிய மத்திய அரசு! இன்று முதல் முக்கிய நடவடிக்கை

    வெங்காய விலை தாறுமாறு உயர்வு! களத்தில் இறங்கிய மத்திய அரசு! இன்று முதல் முக்கிய நடவடிக்கை

    தமிழ்நாடு
    அதானியுடன் கர்நாடக முதல்வர் சிவகுமார் சந்திப்பு! ராகுலிடம் அனுமதி வாங்கினாரா? கொந்தளித்த பாஜக!

    அதானியுடன் கர்நாடக முதல்வர் சிவகுமார் சந்திப்பு! ராகுலிடம் அனுமதி வாங்கினாரா? கொந்தளித்த பாஜக!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share