வருகின்ற மார்ச் 14ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற இருக்கிறது, அதற்காக வேட்புன தாக்கல் நாளை நிறைவடைய உள்ள நிலையில் அதற்கான வேட்பாளர்களை அறிவிக்க வேண்டிய சூழ்நிலையில் திமுக, அதிமுக என இரு கட்சிகளுக்குமே உள்ளன. திமுகாவை பொறுத்தவரைக்கும் கூட்டணியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக 28 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் கேட்டு பேரம் பேசி வருகிறது.
ஆனால் திமுக முதற்கட்ட அமர்விலே 25 தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்க முடியும் என கட் அண்ட் கறாராக சொல்லிவிட்டது. ஆனால் 25 இடங்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதில் காங்கிரஸ் தலைமை உறுதியாக உள்ளது. இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையே பெரும் புயல் கிளம்பியுள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 25 இடங்களை பெற்ற காங்கிரஸ் 18 இடங்களில் வெற்றி பெற்றது. அதேபோல 2024ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் புதுவை உட்பட 10 தொகுதிகளை பெற்று 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்கள்.
இந்நிலையில் வருகின்ற தேர்தலுக்கான கூடுதல் இடங்களை கேட்டார்கள். முதற்கட்டமாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கை காங்கிரஸ் தரப்பிலிருந்து வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையால் திமுக - காங்கிரஸ் இடையே மிகப்பெரிய கருத்து மோதல் வெடித்தது. இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே, ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என பகிரங்கமாக அறிவித்தார். இதனையடுத்து காங்கிரஸ் அந்த கோரிக்கையில் இருந்து பின்வாங்கியது. ஆனால் கூடுதல் இடங்கள் என்ற கோரிக்கையை மட்டும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என அடம்பிடித்து வருகிறது. ஆனால் திமுகவோ, காங்கிரஸ் உடைய பலத்தை பொறுத்து அதிகமாகத்தான் இடம் ஒதுக்கிறோம் என்றும், ஒவ்வொரு கூட்டணி கட்சிகளும் கொடுக்கப்பட்ட இடத்தை விட காங்கிரஸுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கூடுதல் இடங்களை தான் கொடுத்திருக்கிறோம் என்றும் தெரிவிக்கிறது. அதுமட்டுமின்றி அவர்களை தேர்தலில் வெற்றி பெற வைக்க திமுக சார்பில் குழு அமைப்பது, வாக்குச்சாவடி முகவர்களை தயார்படுத்துவது, பொருளாதாரம் என அனைத்து வேலைகளையும் திமுக தான் செய்கிறது என்கின்றனர் அறிவாலயத்தின் முக்கிய நிர்வாகிகள்.
இதையும் படிங்க: “வந்தா வாங்க... வராட்டி போங்க...” - காங்கிரஸுக்கு 24 மணி நேரக் கெடு விதித்த திமுக.... கதறும் கதர்கள்...!
இதனிடையே காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகத்துடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவது திமுகவை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனால் “கொடுக்கிற சீட்டை வாங்கிக் கொண்டால் இருங்கள்... இல்லையெல் கூட்டணியை விட்டு வெளியேறுங்கள்” என்கிற அளவிற்கு திமுக அதிரடி காட்டி வருகிறது. இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், காங்கிரஸ் இப்போது வரைக்கும் ஒரு முடிவு சொல்லாமல் இழுத்து கொண்டே இருக்கிறது. காங்கிரஸ் கூட்டணிக்குள் இல்லாவிட்டாலும் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற கருத்து திமுகவில் நிலவி வருகிறது.
இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறதா? இல்லையா? என்பது இன்றைய தினம் தெரிந்துவிடும் எனக்கூறப்படுகிறது. மாநிலங்களவையில் திமுகவிற்கு 4 இடங்கள் உள்ளது. நான்கில் ஒன்றை தேமுதிகவிற்கு தர ஒப்புக்கொண்டுள்ள நிலையில், காங்கிரஸுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டால் கூட்டணியில் நீடிக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை 3 இடங்களிலும் திமுக வேட்பாளர்களே களம் கண்டால், கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியேறக்கூடும்.
அதன் அடிப்படையிலே காங்கிரஸ் கட்சி இன்றைய தினம் தனது முடிவை அறிவிக்காமல் இருந்தால் திமுக அதை விட்டுவிட்டு அடுத்த கட்ட வேலையை பார்க்க உள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை காங்கிரஸ் கட்சி தவெகவுடன் சென்றாலும் வெற்றி வாய்ப்பு குறைவே எனக்கூறப்படுகிறது. ஏனெனில் திமுக எவ்வளவு கள வேலை பார்த்து காங்கிரஸ் வேட்பாளர்களை ஜெயிக்க வைத்தார்கள் என்பது இருதரப்புக்கும் தெரியும் என்பதால் சிக்கல் நீடித்து வருகிறது.
இதையும் படிங்க: பிரதமரின் பொம்மையை தூக்கில் தொங்கவிட்ட காங்கிரசார்..!! நயினார் கண்டனம்..!!