இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கூறுகையில், அரசியலில் ஆட்சி மாறாது, காட்சி மாறும் என்பதற்கான சில சந்திப்புகள் தமிழகத்தில் நடந்து வருவதாகவும், எல்லோரும் நல்லாட்சியை நோக்கி வருவார்கள், கருத்து வேறுபாடுகளை மறந்து கூட நல்லாட்சியை நிலைநாட்ட நல்லாட்சி மீண்டும் அமைய வேண்டும் என்பதற்காக எல்லோரும் தேடி வருவது வழக்கம் அதன் அடிப்படையில் எல்லோரும் ஒன்று இணைந்து தமிழகத்தை பலப்படுத்தி, வலிமைப்படுத்தி மதவாதம் மற்றும் பாசிச சக்திகளுக்கு எதிராக ஒன்று இணைவது போல ஓபிஎஸ் மற்றும் பிரேமலதா ஆகியோர் திமுக தலைவரை சந்தித்து இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை உதகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் நலன், தமிழ்நாட்டின் எதிர்காலம் ஆகியவற்றை பாதுகாக்கவும் தமிழகத்தில் நல்லாட்சி மீண்டும் அமைய வேண்டும் என்ற அடிப்படையில் அவர்கள் சந்தித்து இருப்பதாகவும் அவர்களை கூட்டணியில் சேர்த்து கொள்வது குறித்து காங்கிரஸ் மற்றும் திமுக கட்சி தலைமை தான் முடிவு செய்யும் என்றார்.
தமிழகத்திற்கு மோடி 100 முறை அல்ல 200 முறை வந்தாலும் பாஜகவை தமிழக மக்கள் அங்கீகரிக்க மாட்டார்கள் என்ற அவர் தமிழகத்தில் பாஜக புறம் தள்ளப்பட்ட கட்சி என்றும் அதிமுக பாஜக கூட்டணி என்பது இயற்கைக்கு எதிரான கூட்டணி மக்களால் புறக்கணிக்கப்பட்ட கூட்டணி என்பதால் அந்த கூட்டணியை ஒருபோதும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் என்கிட்ட கேக்கல... முதல்வரை அவர் சந்திக்க காரணம்? நைனார் நாகேந்திரன் பேட்டி
இதையும் படிங்க: சும்மா நோண்டாதிங்க! ஓபிஎஸ் பற்றி தரக்குறைவாக பேசக்கூடாது... செல்லூர் ராஜு காட்டம்.