நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலோடு திமுக அதிமுகவின் நான் நீ என்ற அகம்பாவம் அழிந்து போய் இருக்கிறது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் விசுவநாதன் கடுமையாக விமர்சித்தார்
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 59 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று சாதனையாக, தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி முன்னாள் அமைச்சர் கந்தசாமி உள்ளிட்ட கட்சியின் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று கூறினார்கள். இதை யார் எழுதினார்கள்,என்று தெரியவில்லை, ஆட்சியில் பங்கு என்பது நடக்காது, முடியாது, சாத்தியமாகாது, என்று கூறினார்கள், ஆனால் இந்த தேர்தலில் திமுக அதிமுகவின் நான் நீ என்று அகம்பாவம் அழிந்து போயிருக்கிறது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தர்மபுரியில் பதற்றம்... இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து..! சட்டம் ஒழுங்கை சாடிய நயினார்..!!
தேர்தலுக்கு முன்பு தவெக உடன் கூட்டணி அமைந்திருந்தால் 10 அமைச்சர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து இருப்பார்கள், ஆனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளே இருந்த சில குள்ளநரிகள் குழி பறித்தார்கள் அதனால் அந்த வாய்ப்பை இழந்தோம், யார் யாரெல்லாம் குள்ளநரி போன்று குழி பறித்தார்களோ அவர்களெல்லாம் இன்று வெளியேறி விட்டார்கள், நஞ்சு கலக்காத தமிழ் பேசுகின்ற முதல்வர் விஜய் பின்னால் சென்று கொண்டிருக்கிறோம்,
பல்வேறு தேர்தல்களில் திமுக வென்ற போது கூட ஆட்சியில் பங்கு கேளுங்கள் என்று கூறினோம், 2006- ல் திமுக மைனாரிட்டி அரசாக இருந்த போது கூட ஆட்சியில் பங்கேற்க முடியவில்லை. ஆனால்,2026- ல் கேட்காமலே கிடைத்தது என்றார்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தமிழக வெற்றி கழக தலைமையிலான அணி அமோக வெற்றி பெறும், அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்றார்.
இதையும் படிங்க: சென்னை GH-க்கு வந்த குட் நியூஸ்! ஹூண்டாய் நிறுவனம் கொடுத்த 169 மாடர்ன் மெடிக்கல் எக்யூப்மென்ட்ஸ்!