கோவையில் செய்தியாளர்களை சந்தித்த சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தவெக எம்எல்ஏக்கள் சம்பந்தப்பட்ட பேரம் பேசும் விவகாரத்தில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், பல முக்கிய தகவல்களை வெளியிட்டார்.
“நான்கு எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தபோதே இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டாம் என நாங்கள் எச்சரித்தோம். எம்எல்ஏக்கள் தாங்களாகவே முன்வந்ததாகக் கூறினர். ஆனால் அவர்களை சேர்த்து ஊக்குவிப்பது சரியல்ல என்று நாங்கள் கேள்வி எழுப்பினோம்” என்றார் சண்முகம்.
அதிமுகவில் உள்ள உட்கட்சி பூசலால் தான் எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு அளித்ததாகவும், ஆட்சிக்கு தனியாக ஆதரவு அளித்ததாக தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு செல்வது சகஜம் என்றாலும், கோடிக்கணக்கில் பணம் கொடுத்து எம்எல்ஏக்களை வாங்க முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று விமர்சித்தார்.
இதையும் படிங்க: திமுக - அதிமுக இணைந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை! சி.பி.எம். சண்முகம் அதிரடி பேச்சு! படு வைரல்!

“திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடைபெற்றுள்ளது. மு.க.ஸ்டாலின் விரைவில் தேர்தல் வரும் என்று பேசியதன் பின்னணி இப்போது தெளிவாகிறது” என்று சண்முகம் கூறினார். ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அதிகாரத்தில் இல்லாததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதே இந்த முயற்சிக்கு காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார். இதனிடையே, தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. எதிர்கால அரசியல் நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பதை மக்கள் உற்று நோக்கி வருகின்றனர். சிபிஎம் தலைவரின் இந்த பேட்டி அரசியல் கட்சிகளிடையே புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: அரசியலில் ட்விஸ்ட்..!! "அண்ணாமலை கட்சி... பாஜக உத்தி"..! பெ. சண்முகம் விமர்சனம்..!!