வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

விண்ணை பிளந்த அரோகரா கோஷம்.. திருச்செந்தூரில் கடலலையாய் திரண்ட பக்தர்கள்..!

விடுமுறை தினமான இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விஷேஷ நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். மேலும் இக்கோயில் சூரனை வதம் செய்த இடமாகவும், குரு ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இதனிடையே மண் அரிப்பு காரணமாக திருச்செந்தூர் கடற்கரையில் இருந்து அவ்வப்போது பல சிலைகள் வெளி வருகின்றன.

இந்நிலையில் கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை தினமான இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடினர். இதைத்தொடர்ந்து பொது தரிசன வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளதால், கோவில் வளாகம், கடற்கரைப் பகுதி, நாழிக்கிணறு முக்கிய சாலைகள் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: கண்டாங்கி பட்டு உடுத்தி.. தங்கப்பல்லக்கில் மதுரை கள்ளழகர்..! திரண்ட பக்தர்கள்..!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி அன்று கும்பாபிஷேக விழா நடந்தது. அதன் பின் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் ஜூலை மாதம் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: கண்டாங்கி பட்டு உடுத்தி.. தங்கப்பல்லக்கில் மதுரை கள்ளழகர்..! திரண்ட பக்தர்கள்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी