தருமபுரி தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில், இளைஞரணி செயலாளர் விஜய் பிரபாகரன் பேசும்போது , எனக்கு கேப்டன் விஜயகாந்த் மகன் என்பதே, பெரிய பொறுப்பு, பதவி. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அரசியல் கூட்டங்களில் பேசியிருக்கிறேன். எல்லோருடைய விருப்பதால் இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று இரவு வரை எனக்கு இந்த பொறுப்பு வழங்குவது தெரியாது.

வண்டியில் வரும்போது வெள்ளை உடையில் இருந்தேன். மாமா சுதீஷ் மஞ்சள் சட்டை , கருப்பு பேண்ட் அணிய வேண்டும் என்று சொன்னார். நான் புது துணி வாங்கி, காரில் வரும்போதே மாற்றிக்கொண்டு இறங்கினேன். தேமுதிக தொடங்கி 20 ஆண்டுகள் ஆகிறது.
இப்போது புதுப்புது கட்சி தொடங்கி இருக்காங்க. ஆனாலும் நம்ம பவர் என்ன என்பது நமக்கு தெரியும். இன்னும் தேர்தலுக்கு ஒரு வருடம் இருக்கிறது. நமக்கு திறமை, உழைப்பு இருக்கு.
234 தொகுதியில் வேலை செய்து வெற்றி பெற வேண்டும் என்று இந்த பதவியேற்பில் இலட்சியமாக ஏற்கிறேன்.

நான் நடிகர் அல்ல. நான் பயந்து ஓடல, என்னை விட எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எதிர்த்து வெற்றி பெறுவேன். தமிழ்நாடு அரசியல் நம்மை நோக்கி வரப்போகிறது. களத்தில் நாம் உறுதியாக இருக்கிறோம். கடலூர் மாநாட்டில் நமது வலிமையை காட்டவோம். நீங்கள் ஆசைப்பட்டால், இன்று இளைஞரணி செயலாளராக நிற்கிறேன். நான் ஆசைப்பட்டதை நீங்கள் செய்ய வேண்டும். நமது கட்சி வெற்றி பெற்று, கோட்டைக்கு செல்ல வேண்டும். இன்னும் ஓராண்டு தான் உள்ளது. எல்லாவற்றையும் மறந்து, புது ரத்தம் பாய்ச்சி பணியாற்றுவோம்.

இதையும் படிங்க: விஜயகாந்திற்காக 2 கோரிக்கைகள்... தேமுதிக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?
நிச்சியம் 2026-ல் நமக்கு வெற்றி கிடைக்கும். தேமுதிக-வை பார்த்தல் பயம் இருப்பதால் தான், தேமுதிக-வை பற்றி பேசுகிறார்கள். நமக்கான காலம் தயாராக இருக்கு. உங்கள் தம்பியாக எப்போதும் உங்களுடன் இருப்பேன். இத்தனை நாள் சத்ரியனாக இருந்தோம், இனி சாணக்கியனாக இருக்க வேண்டும். நம் கட்சி வெற்றி பெற்று, கோட்டைக்குள் போக வேண்டும். மக்களுக்கான சேவைகளை நாம் செய்ய வேண்டும். கடலூர் மாநாட்டில் அதிக அளவில் மக்கள் கூட வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "கட்சி வேஷ்டி ஏன் கட்டவில்லை? என சிலர் கேட்டனர். அரசியலில் முதன் முதலில் பேன்ட் - ஷர்ட் போட்டவன் நான் தான். அதற்கு அப்புறம்தான், அண்ணாமலை அண்ணணா இருக்கட்டும், சீமான் அண்ணணா இருக்கட்டும், முதலமைச்சர் ஸ்டாலின் முதல் விஜய் வரை எல்லாரும் பேன்ட் - ஷர்ட்தான் போடுறாங்க. அதனால, லுக்-அ பார்க்காதீங்க. உள்ளத்தை பாருங்க. என்னைக்கு கரை வேஷ்டி கட்டணும்னு கேப்டன் சொல்வாரு, அன்றைக்கு நான் கட்டுறேன் என்றார்.
இதையும் படிங்க: மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கேன்..! நான் கட்சி பதவியில் இருந்து விலக காரணம் இது தான்..! மனம் திறந்த துரை வைகோ..!