தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக திமுக தகவல் தொழில்நுட்ப அணி கடுமையான விமர்சனத்தை வெளியிட்டது. இது தமிழ்நாட்டு அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதை "தமிழ்த்தாயின் முகத்தில் கரி பூசிய செயல்" என்று விமர்சித்த அந்த அணி, தவெக அரசை "டெல்லி எஜமானர்களுக்கு அடிமை" என்று சாடியது.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக பெரும்பான்மை இல்லாமல் ஆனாலும் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பாரம்பரிய மரபு மீறப்பட்டது. தமிழ்நாட்டில் வழக்கமாக அரசு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசிய கீதத்துடன் முடிவடையும். ஆனால் இந்த விழாவில் முதலில் வந்தே மாதரம், பின்னர் தேசிய கீதம், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது.

இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் சமீபத்திய உத்தரவு காரணமாக இருக்கலாம் என்று தவெக தரப்பு விளக்கம் அளித்தாலும், எதிர்க்கட்சிகள் மற்றும் சில கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் இன்று மீண்டும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. முன்பு நடந்த அதே முறையில் பாடல்கள் இசைக்கப்பட்டது. இதனை திமுக விமர்சித்து உள்ளது.
இதையும் படிங்க: "ஒருநாளும் ஓயமாட்டோம்"..! கருணாநிதி பிறந்தநாள் வந்தாச்சு..! தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை..!
கட்சியில் மட்டும்தான் 'தமிழகம்', ஆட்சியில் முழுவதும் 'சங்கித்தனம்' என விமர்சித்துள்ளது. பதவியேற்பு விழாவில் நடந்ததை ஏதோ தெரியாமல் நடந்த தவறு என்று சப்பைக்கட்டு கட்டியவர்கள், இன்று அமைச்சரவை விரிவாக்கத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்தை 3-வது இடத்திற்குத் தள்ளி அவமானப்படுத்தியுள்ளனர் என்று கூறப்பட்டு உள்ளது. கட்சி பெயரில் தமிழை வைத்துக்கொண்டு தமிழ்த்தாயையே ஓரம் கட்டும் இந்த அடிமைத்தனம்தான் உங்கள் அரசியலா என கேட்கப்பட்டு இருக்கிறது. டெல்லி எஜமானர்களைக் குளிர்விக்கத் துடிக்கும் இந்த தவெக அரசின் முகமூடி கிழிந்துவிட்டது என்றும் கூறியது.
இதையும் படிங்க: "சமூக நீதி முன்னோடி"..! அயோத்திதாசர் பிறந்த நாளில் ஸ்டாலின் மரியாதை..!