• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நாளை தமிழகம் முழுவதும் தயாரா இருங்க - ஆளுநருக்கு எதிராக திமுக வெளியிட்ட ’பரபர’ உத்தரவு!

    தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரைக் கண்டித்து நாளை மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது. 
    Author By Amaravathi Mon, 06 Jan 2025 15:00:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-announce-protest-against-governor-rn-ravi

    தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரைக் கண்டித்து நாளை மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது. 

    ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து நாளை காலை 10 மணிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அமைதியாக இருக்கும் ஆளுநர்கள், பா.ஜ.க அல்லாத மாநில அரசுகளில் தனி ராஜாங்கம் நடத்த முயல்கிறார்கள். ஆளுநர் மாளிகைகளை வைத்து மாநில நிர்வாகத்தை முடக்குவதை ஒரு வாடிக்கையாகவே வைத்திருக்கிறது மோடி அரசு. அதன் வெளிப்பாடுதான் இன்றைக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வு.

    ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் மாநில உரிமைகளை சிதைத்து, மாநில சுயாட்சியை பறிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். 2023-ம் ஆண்டு சட்டமன்றத்தில் ஆளுநர் ரவி உரையாற்றிய போது, மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், கலைஞர் ஆகிய சொற்களை உச்சரிக்கவில்லை. ’அரசு கொடுத்த உரையில் இருப்பதுதான் அவை குறிப்பில் இடம்பெறும்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அப்போதே நேருக்கு நேர் பதிலடி கொடுத்ததும், ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் அவையில் இருந்து வெளியேறினார். 2024-ம் ஆண்டு ஆளுநர் உரையின் தொடக்கத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்படுகிறது, தேசிய கீதம் பாடப்படுவது இல்லை எனக்கூறி உரையை வாசிக்காமல் அமர்ந்தார் ஆளுநர் ரவி. முந்தைய ஆண்டில் கூறிய அதே துருப்பிடித்த ஆயுதத்தை இந்த ஆண்டும் மீண்டும் தூக்கி கொண்டு வந்து, அவையில் இருந்து உரையை வாசிக்காமல் வெளியேறியிருக்கிறார் ஆளுநர் ரவி.

    DMK

    தொடக்கத்தில் தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் என்ற தன்னுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் உரையை படிக்காமல் வெளியேறியதாக ஆளுநர் அளித்த விளக்கம் புல்லரிக்க வைக்கிறது. சில மாதங்கள் முன்பு பிரசார் பாரதியின் இந்தி மாத விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் பங்கேற்ற போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் அவமதிக்கப்பட்டது. இப்போது தேசிய கீதம் முதலில் பாடவில்லை என சொல்லி மறைமுகமாக தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநர் எதிர்த்திருக்கிறார். அன்று தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிட நல் திருநாடும் என்பதை விடுத்துவிட்டு பாடி நமது தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தார்.

    இன்று சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டதை சகித்துக் கொள்ளாமல் ஆளுநர் ரவி, தேசிய கீதம் என்ற போர்வையை போர்த்தி கொண்டு உடனடியாக சபையை விட்டு வெளியேறி, தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்திருக்கிறார். தேசிய கீதத்தை சட்டமன்றம் அவமதித்துவிட்டதாக தோற்றத்தை உருவாக்க முயல்கிறார். கடந்த ஆண்டே மழுங்கி போன இந்த திட்டத்தை மீண்டும் எழுப்ப ஆளுநருக்கு யோசனை கொடுத்தவர்கள் எவ்வளவு பெரிய புத்திசாலிகளா இருப்பார்கள்! தேச பக்திக்கு ஒட்டுமொத்த குத்தகைதாரர் போல ஆளுநர் வேடம் கட்டுகிறார். ஆளுநர் உரையின் போது தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் தேசிய கீதமும் பாடப்பட்டு வருவதுதான் நடைமுறை. இதனை தகர்ந்து ஆளுநர் ஒருவரே நடந்து கொள்கிறார் என்றால், அது அரசியல் அல்லாமல் என்னவாக இருக்க முடியும்? முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் நிறைவில் தேசிய கீதமும் பாடப்படும் நடைமுறை ஆளுநர் ஆர்.என்ரவி அவர்களுக்கு தெரிவில்லை என்றால், இதற்கு முன்பு இருந்த பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்டோர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

    DMK

    இப்படியான மோதல் போக்குகள் காரணமாகத்தான் பாஜக ஆளாத பல மாநிலங்களில் ஆளுநரை சட்டப்பேரவைக்கு அழைக்காத நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தெலங்கானாவில் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆளுநராக இருந்தபோது அப்போதைய முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அவரை அழைக்கவே இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் ஜனநாயக மாண்பை கடைபிடிக்கும் வகையில் ஆளுநரை அழைக்கிறோம். அரசியல் சாசன சட்டப்படி ஆளுநருக்கு தரவேண்டிய மரியாதையை திராவிட மாடல் அரசு அளித்து வருகிறது. ஆனால், ஆளுநர் தொடர்ந்து தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் சட்டப்பேரவை மாண்பையும் குலைக்கும் வகையில் நடந்து வருகிறார்.

    மாநிலங்களின் தனித்த அடையாளங்களை அழித்து ஒரே நாடு ஒரே மொழி ஒரே பண்பாடு என்ற ஒற்றை ஆட்சி முறையை கொண்டுவந்து மாநில சுயாட்சியை அழிக்க நினைக்கிறது ஒன்றிய அரசு. அதற்கு ஆளுநரை கருவியாக பயன்படுத்த முயல்கிறார்கள். மாநில சுயாட்சியை உயிர் கொள்கையாக தூக்கிப் பிடிக்கும் திமுக அதை ஒருக்காலும் அனுமதிக்காது. மாநில சுயசாட்சியை பறிக்க நினைக்கும் ஒன்றிய அரசின் முயற்சியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அரணாக இருந்து தடுத்து நிறுத்துவார். திராவிட சுவரை தாண்டி ஆளுநரும் நுழைய முடியாது ஆரியமும் நுழையவிட மாட்டோம். மாநிலத்தின் பெருவாரியான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனநாயக முறையில் ஆட்சி செய்து வரும் அரசுக்கு என்னவெல்லாம் தொல்லை தர முடியுமோ அவற்றையெல்லாம் பாசிச பாஜக அரசு கொடுத்து வருகிறது. நிதி பகிர்வில் பாரபட்சம் முதல் தமிழ்நாடு அடையாளங்களை அழிக்கத் துடிப்பது வரை முயன்று வரும் மோடி அரசு, இப்போது மக்களால் அமைக்கப்பட்ட சட்டமன்றத்தையும் ஆளுநர் மூலம் அவமதிக்க முயல்கிறது. பாஜகவின் எந்த முயற்சியும் இங்கே பலிக்காது.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மீறி ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் தனித்து செயல்படுவது மக்களாட்சியை அவமதிக்கும் செயல். இந்திய அரசியல் சாசனத்திற்கே எதிரானதாகும். ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட நியமன பதவியில் இருக்கும் ஒருவர், தன்னை சர்வாதிகாரியாக நினைத்து கொண்டு மக்களையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் அடக்கி ஆளலாம் என்ற அற்ப ஆசையோடு நடந்து வருகிறார் ஆளுநர் ரவி அவர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உறுதுணையாக இருந்து மாநில வளர்ச்சிக்கு உதவி செய்ய வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது. ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் உறவுப் பாலமாகத் திகழ வேண்டியவர், ஒன்றிய அரசின் ஏஜென்டாக இருந்து கொண்டு தமிழ்நாட்டு நலனை கெடுக்கும் விதமாக நடந்து வருகிறார் ஆளுநர் ரவி அவர்கள். பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபின் தங்களால் வெல்ல முடியாத மாநிலங்களில் எல்லாம் இப்படி ஆளுநர் மூலம் முட்டுக்கட்டை போட்டு நெருக்கடி கொடுத்து மாநில அரசுகளின் செயல்பாடுகளை முடக்கப்பார்க்கிறது. மேற்கு வங்கம், கேரளா, டெல்லி, பஞ்சாப் என எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் அத்தனை மாநிலங்களிலும் ஆளுநர்களை ஏவி விட்டு மாநில சுயாட்சியை பறித்து வருகிறது பாஜக அரசு. மாநில சுயாட்சியை நசுக்கி ஒன்றிய அரசு மூலம் ஒற்றை ஆட்சியை நடத்தவே பாஜக அரசு விரும்புகிறது. இதை ஒருக்காலும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள்.

    DMK

    குஜராத் முதல்வராக மோடி இருந்த போது குஜராத் இந்தூரில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் 2012 மார்ச் 4-ம் தேதி ஆளுநர் பற்றிய கருத்து ஒன்றை தெரிவித்தார். ‘‘மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட நீதிபதி மதன் மோகன் புஞ்சி கமிஷன் அறிக்கையின் படி, அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது. ஆனால், மன்மோகன் சிங் அரசோ குஜராத்தில் அரசியல்வாதிகளை மட்டுமல்ல; மாற்றுக் கருத்துகளைக் கொண்ட அரசியல்வாதிகளையும் ஆளுநராக நியமிக்கிறது’’ என்றார் மோடி.

    அந்த மோடிதான் பிரதமர் ஆன பிறகு பா.ஜ.க-வைச் சேர்ந்த அரசியல்வாதிகளைத்தான் ஆளுநர்களாக நியமித்தார். தமிழக பா.ஜ.க-வைச் சேர்ந்த தமிழிசை செளந்தரராஜன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளி மாநிலங்களில் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருந்த போதுதான் பன்னீர்செல்வத்தையும் பழனிசாமியையும் ஒன்றாகக் கைகோர்த்து இணைத்து வைத்தார்.

    குஜராத் முதல்வர் மோடி இருந்த போது உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு, லோக் ஆயுக்தா விவகாரங்களில் ஆளுநர் கமலா பெனிவாலுடன் மல்லுக் கட்டினார். இதனால் கோபம் அடைந்த முதல்வர் மோடி மாநில உரிமையை நிலைநாட்ட அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் அனுப்பினார். ‘கூட்டாட்சிக் கொள்கைகளை மீறும் கவர்னரை திரும்ப அழைக்க வேண்டும். ஒரு மாநிலத்தின் ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையின்படி செயல்பட வேண்டும்’ என்று கடிதத்தில் மோடி குறிப்பிட்டிருந்தார். அந்த மோடி பிரதமர் ஆன பிறகு பா.ஜ.க-வை எதிர்க்கும் மாநில அரசுகளை ஆளுநர்கள் மூலம் இடையூறு செய்து வருகிறார். எத்தனை இடையூறுகள் வந்தாலும் மாநில உரிமை, மாநில சுயாட்சியை விட்டு கொடுக்காத மண் தமிழ் மண்.

    DMK

    மாநில உரிமை, மாநில சுயாட்சி, மாநிலத்திற்கு வர வேண்டிய நிதி போன்ற விவகாரங்களை எல்லாம் முன்வைத்து ஒன்றிய அரசுடன் திமுக போராடிக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசின் ஏஜெண்ட்டாக செயல்படும் ஆளுநரை காப்பாற்றவும், ஒன்றிய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை திசைமாற்றும் வகையிலும் அதிமுக-பாஜக கள்ளக்கூட்டணி வித்தைகளை காட்டிக் கொண்டிருக்கிறது. அதிமுகவின் துரோகங்களை புரிந்து கொண்ட தமிழ்நாட்டு மக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை தொடர்ந்து பத்து தேர்தல்களில் தோற்கடித்த பிறகும் தமிழ்நாட்டைக் காட்டிக் கொடுக்கும் அரசியலை எட்டப்பன் பழனிசாமி செய்து வருகின்றார். திமுகவின் திராவிட மாடல் ஆட்சி என்றைக்குமே மாநில உரிமைகளையும் தமிழ்நாட்டு மக்களின் நலனையும் விட்டுக் கொடுக்காது.

    தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்தும், ஒன்றிய அரசின் ஏஜெண்ட்டாக தமிழ்நாட்டின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரைக் காப்பாற்றிடவும், ஒன்றிய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை திசைமாற்றவும் வித்தைகளைச் செய்யும் அதிமுக- பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் திமுக சார்பில் 07.01.2025 காலை 10 மணியளவில் “மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.

    மாநில உரிமையில் அக்கறை உள்ள அனைவரும் ஒன்று சேர்வோம். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காத, தமிழ்நாட்டின் உரிமைகளை மதிக்காத, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை மதிக்காத ஆளுநர் ரவியை உடனடியாக ஜனாதிபதி திரும்ப பெற வேண்டும். “ஆளுநர் ரவியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு” என நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம். கள்ளக்கூட்டணி சேர்ந்து ஆளுநரைக் காப்பாற்றி, தமிழ்நாட்டைச் சிறுமைப்படுத்த முயலும் அதிமுக-பாஜகவை அம்பலப்படுத்துவோம்! திராவிடச் சுவரை தாண்டி ஆளுநரும் நுழைய முடியாது ஆரியமும் நுழையவிட மாட்டோம்! இது மாநில உரிமைக்கான போர். இதில் வெற்றி பெறுவோம்.

     

     

    இதையும் படிங்க: ஆளுநருக்கு கருத்து சொல்லும் உரிமை இல்லை..அவமதிப்பது தவறு ..குட்டு வைத்த சபாநாயகர் அப்பாவு ..!

    மேலும் படிங்க
    பிஎஃப் பணத்தை இனி இப்படித்தான் எடுக்க முடியும்... புதிய விதிகளை தெரிஞ்சிக்கோங்க மக்களே..!

    பிஎஃப் பணத்தை இனி இப்படித்தான் எடுக்க முடியும்... புதிய விதிகளை தெரிஞ்சிக்கோங்க மக்களே..!

    இந்தியா
    தமிழ்நாடே கொந்தளிப்பு - சூர்யா - ஜோதிகா எங்கப்பா? - மீண்டும் சர்ச்சையில் சிவக்குமார் ஃபேமிலி...!

    தமிழ்நாடே கொந்தளிப்பு - சூர்யா - ஜோதிகா எங்கப்பா? - மீண்டும் சர்ச்சையில் சிவக்குமார் ஃபேமிலி...!

    அரசியல்
    அஜீத்குமார் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரம்... பொறுப்பேற்றார் சிவகங்கை மாவட்டத்தின் புதிய எஸ்.பி!!

    அஜீத்குமார் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரம்... பொறுப்பேற்றார் சிவகங்கை மாவட்டத்தின் புதிய எஸ்.பி!!

    தமிழ்நாடு
    பாரபட்சமற்ற விசாரணை; நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும்.. மு.க.ஸ்டாலின் உறுதி!!

    பாரபட்சமற்ற விசாரணை; நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும்.. மு.க.ஸ்டாலின் உறுதி!!

    தமிழ்நாடு
    மதிமுக எம்.எல்.ஏ.வுக்கே இப்படியொரு கதியா? - அதிமுக முன்னாள் கவுன்சிலரால் கதறல்...!

    மதிமுக எம்.எல்.ஏ.வுக்கே இப்படியொரு கதியா? - அதிமுக முன்னாள் கவுன்சிலரால் கதறல்...!

    அரசியல்
    அஜீத்குமார் கொலை விவகாரம்; மூர்க்கத்தனமாக எதற்கு தாக்க வேண்டும்? கொந்தளித்த வானதி சீனிவாசன்!!

    அஜீத்குமார் கொலை விவகாரம்; மூர்க்கத்தனமாக எதற்கு தாக்க வேண்டும்? கொந்தளித்த வானதி சீனிவாசன்!!

    அரசியல்

    செய்திகள்

    பிஎஃப் பணத்தை இனி இப்படித்தான் எடுக்க முடியும்... புதிய விதிகளை தெரிஞ்சிக்கோங்க மக்களே..!

    பிஎஃப் பணத்தை இனி இப்படித்தான் எடுக்க முடியும்... புதிய விதிகளை தெரிஞ்சிக்கோங்க மக்களே..!

    இந்தியா
    தமிழ்நாடே கொந்தளிப்பு - சூர்யா - ஜோதிகா எங்கப்பா? - மீண்டும் சர்ச்சையில் சிவக்குமார் ஃபேமிலி...!

    தமிழ்நாடே கொந்தளிப்பு - சூர்யா - ஜோதிகா எங்கப்பா? - மீண்டும் சர்ச்சையில் சிவக்குமார் ஃபேமிலி...!

    அரசியல்
    அஜீத்குமார் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரம்... பொறுப்பேற்றார் சிவகங்கை மாவட்டத்தின் புதிய எஸ்.பி!!

    அஜீத்குமார் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரம்... பொறுப்பேற்றார் சிவகங்கை மாவட்டத்தின் புதிய எஸ்.பி!!

    தமிழ்நாடு
    பாரபட்சமற்ற விசாரணை; நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும்.. மு.க.ஸ்டாலின் உறுதி!!

    பாரபட்சமற்ற விசாரணை; நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும்.. மு.க.ஸ்டாலின் உறுதி!!

    தமிழ்நாடு
    மதிமுக எம்.எல்.ஏ.வுக்கே இப்படியொரு கதியா? - அதிமுக முன்னாள் கவுன்சிலரால் கதறல்...!

    மதிமுக எம்.எல்.ஏ.வுக்கே இப்படியொரு கதியா? - அதிமுக முன்னாள் கவுன்சிலரால் கதறல்...!

    அரசியல்
    அஜீத்குமார் கொலை விவகாரம்; மூர்க்கத்தனமாக எதற்கு தாக்க வேண்டும்? கொந்தளித்த வானதி சீனிவாசன்!!

    அஜீத்குமார் கொலை விவகாரம்; மூர்க்கத்தனமாக எதற்கு தாக்க வேண்டும்? கொந்தளித்த வானதி சீனிவாசன்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share