2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை திமுக நடத்தி முடித்திருக்கிறது. 200க்கும் மேற்பட்ட இடங்களை வெல்ல வேண்டும் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்காக நிர்ணயித்த நிலையில், கட்சி தனது பிரச்சார ஏற்பாடுகளை முறையாகத் தொடங்கியது.

கடந்த மாதம் நடந்த அமைச்சரவை கூட்டத்தின் போது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பாடுகள், பேச்சு இருக்கக்கூடாது என அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது. மேலும் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் துறைரீதியான பணியை விரிவுப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டது.

திமுக அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்திருப்பது, மூத்த அமைச்சர்களான பொன்முடி மற்றும் துரைமுருகனின் சர்ச்சை பேச்சு என பல்வேறு பலத்த அடிகளுக்கு இடையே திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஸ்டாலின் நடத்தி முடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: இனி பொறுமையா இருக்க முடியாது! சரி இல்லாத நிர்வாகிகள தூக்குங்க! ஆப்பு வைத்த முதலமைச்சர்...
இந்த கூட்டத்தின் போது, அமைச்சர்கள் இனி சென்னையில் இருப்பதைவிட மாவட்டங்களில் அதிக அளவில் செலவிடுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். தொடர்ந்து அந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ஜீன் 1 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார். அதன்பிறகு திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மத்தியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு , பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்களான ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, கனிமொழி, திருச்சி சிவா ஆகியோருடன் 76 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: ஜூன் 1ல் திமுக பொதுக்குழு கூட்டம்! அடுத்தடுத்து நிறைவேறிய அதிரடி தீர்மானங்கள்..!