வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

#Viralvideo பார்க்கவே பயங்கரமா இருக்கே… சுனாமி போல் வந்த ராட்சத பேரலை… எண்ணூரை தெறிக்க விட்ட அர்னாப் புயல்…!

நேற்று இரவு எண்ணூர் பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்திய கடல் சீற்றம், இன்று காலை தணிந்து இயல்பு நிலை திரும்பியுள்ளதைப் பார்க்க முடிகிறது.

அர்னாப் புயல் காரணமாக, சென்னை எண்ணூர் விரைவுச் சாலையை ராட்சத கடல் அலைகள் ஆக்கிரமித்ததால் வாகனங்கள் நிலைகுலைந்தன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது கடல் சீற்றம் குறைந்து காலையில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

சென்னை எண்ணூரில் நேற்று மாலை தொடங்கிய ஆக்ரோஷமான கடல் அலைகள் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தின. இந்நிலையில், தற்போது கடல் சீற்றம் தணிந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது.

குறிப்பாக, வங்கக்கடலில் தீவிரமடைந்துள்ள அருணா புயல் இன்று ஆந்திரக் கடலோரப் பகுதியில் கரையைக் கடக்க உள்ள நிலையில், அதன் தாக்கம் சென்னையிலும் உணரப்பட்டது. நேற்று காலை வரை அமைதியாகக் காணப்பட்ட சென்னை கடலோரப் பகுதிகளில், புயலின் தாக்கத்தால் மாலையில் திடீரெனக் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. பல அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பின.

இதையும் படிங்க: அர்னாப் புயல் எதிரொலி: சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் விமானங்கள் ரத்து!

குறிப்பாக, சென்னை எண்ணூர் பாரதியார் நகர் பகுதியில் வழக்கத்திற்கு மாறாகக் கடல் திடீரெனக் கொந்தளித்தது. பலத்த வேகத்துடன் எழுந்த ராட்சத அலைகள், கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புத் தடுப்புகளையும் தாண்டி சாலைக்குள் புகுந்தன. இதனால் கடல் நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதுடன், அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளிலும் புகுந்தது.

எண்ணூர் விரைவுச் சாலை முழுவதும் கடல் நீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியதால், அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தைக் காண்பதற்காகப் பொதுமக்கள் ஏராளமானோர் சாலையில் திரண்டனர். ராட்சத அலைகளின் சீற்றத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.

இரவு முழுவதும் நீடித்த கடல் சீற்றம், நள்ளிரவுக்குப் பிறகு படிப்படியாகத் தணியத் தொடங்கியது. இதையடுத்து, சாலையில் தேங்கியிருந்த கடல் நீரை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. டிராக்டர்கள் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டதுடன், மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்கள் சாலைகளைச் சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

தற்போது கடல் அலைகளின் சீற்றம் குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்தும் மீண்டும் தொடங்கியுள்ளது.

இருப்பினும், வடக்கு பாரதியார் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் கடல் நீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடல் அலைகளின் வேகத்தில் கற்கள், குப்பைகள் மற்றும் ஓடுகள் தூக்கி வீசப்பட்டுள்ளதால், சாலையின் பல பகுதிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதையடுத்து, குடியிருப்புவாசிகளே தங்களது பகுதிகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கடலோரப் பகுதிகளில் கற்களை உயரமாக அமைத்து, தூண்டில் வளைவுகள் அமைத்துத் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புயல் மற்றும் மழைக் காலங்களில் இதுபோன்ற கடல் சீற்றத்தால் அடிக்கடி பாதிப்புகளைச் சந்திப்பதாகவும், இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

சென்னை எண்ணூர் பாரதிநகர் கடற்கரை பகுதியில் கடல் சீற்றத்துடன் கடல் அலை கரையை நோக்கி வீசியது சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் கடல் நீரில் அடித்துச் சென்றது.#Ennore #Chennai #SeaSurge #CoastalFlooding #TamilNaduNews https://t.co/XmlJ7WHSym

— Sathish Kumar (@Sathish_ernesto) October 27, 2026

இதையும் படிங்க: பருவமழை நேரத்தில் பெரும் அதிர்ச்சி! சென்னையில் வானிலை கண்காணிக்கும் ரேடார் செயல்பாடு முடக்கம்!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी