2026 சட்டமன்ற தேர்தலை மனசுல வச்சி அரசியல் கட்சிகள் களப்பணிகளை தீவிரப்படுத்திக்கிட்டு இருக்காங்க. அதிமுக- பாஜக கூட்டணி மீண்டும் அமைத்திருப்பது ஒருவகையில் சாதகமாக பார்க்கப்பட்டாலும், இஸ்லாமியர்கள் வாக்கு வங்கி, அதிமுக நிர்வாகிகளிடையே நிலவும் அதிருப்தி என பல சிக்கல்கள் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதனால் முதலில் சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இருந்து கட்சியின் நிலை குறித்து ரிப்போர்ட் தர்ற எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தாராம். அதைப் பார்த்து அதிமுக பொதுச்செயலாளர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கொலைகளும், மதக்கலவரங்களும்.! 24 மணி நேரத்தில் இத்தனை சம்பவங்களா? லிஸ்ட் போட்ட இபிஎஸ்..!

கடந்த 2021 சட்டமன்ற தேர்தல்ல சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள மொத்தம் 37 தொகுதிகளில் அதிமுக ஒரே ஒரு இடத்தில மட்டும்தான் ஜெயிச்சிருந்தாங்க. மத்த தொகுதிகளை திமுக கூட்டணிதான் கைப்பற்றி இருந்தாங்க. 2024 நாடாளுமன்ற தேர்தலில் கிடைச்ச வாக்குகளை வச்சு பார்க்கும்போது சட்டமன்ற ரீதியாக அதிமுக அதிக வாக்குகளை பெறவில்லை. ஆனால் திமுக கூட்டணியே அதிக வாக்குகளை பெற்றிருந்தாங்க.

இப்படியே போனா 2026ல இந்த நான்கு மாவட்டங்களலையும் ஒரு தொகுதி கூட தேராதுன்னு இபிஎக்கு ரிப்போர்ட் போயிருக்காம். தேர்தலுக்கு முன்னாடி சில மாவட்ட செயலாளர்கள் ஒன்றிய நிர்வாகிகளை களையெடுக்க வேண்டிய கட்டாயம் இருக்குன்னு எடப்பாடி பழனிசாமி முடிவு செஞ்சிருக்காராம். தேர்தலை மனசுல வச்சு சில அதிரடி நடவடிக்கைகளுக்கு இபிஎஸ் பிளான் பண்றதா எம்ஜிஆர் மாளிகை வட்டாரத்தில் பேசிக்கிறாங்க.
இதையும் படிங்க: அப்பளம் போல் நொறுக்கிய கார்..! முன்னாள் எம்.எல்.ஏ படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதி..!