தேர்தல் நிதிப் பத்திரங்களை வேறு வடிவத்தில் புதிய வருமானவரி மசோதாவில் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புதிய வருமானவரி மசோதாவில் 8-வது பட்டியலில் தேர்தல் நிதிப் பத்திரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் அறக்கட்டளைகளின் ஒட்டுமொத்த வருமானத்தில் தேர்தல் நிதிப்பத்திரங்கள் சேர்க்கப்படவில்லை.
கடந்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி உச்ச நீதிமன்றம், தேர்தல் நிதிப்பத்திரங்கள் தொடர்பாக அளித்த தீர்ப்பில் “ மத்திய அரசின் தேர்தல் நிதிப் பத்திரங்கள் திட்டம் என்று அடையாளம் தெரியாதவர்கள் அளிக்கும் நன்கொடை, இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது, பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், தகவல் பெறும் உரிமைச்சட்டத்தை மீறும் செயலாகும்” என்று தீர்ப்பளித்திருந்தது.

வருமானவரிச் சட்டம் 1961ன் கீழ் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 64 ஆண்டுகள் பழமையான வருமானவரிச் சட்டத்தை மாற்றி, புதிய வருமானவரிச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. 622 பக்கங்கள் கொண்ட பழைய வருமனவரி சட்டம், 4 ஆயிரம் திருத்தங்கள் செய்யப்பட்ட நிலையில் எளிமையாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஏய்... நிறுத்துங்க..! திருச்சி சிவா, வில்சனை கதறவிட்ட நிர்மலா சீதாராமன்

புதிய வருமானவரி மசோதாவில் தேர்தல் நிதிப்பத்திரங்கள் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து ஏஎம்ஆர்சி அன்ட் அசோசியேட்ஸ் சீனியர் பார்ட்னர் ராஜத் மோகன் கூறுகையில் “ புதிய வருமானவரி மசோதாவில் தேர்தல் நிதிப்பத்திரங்கள் அம்சங்கள் சேர்ப்பு என்பது, எதிர்காலத்தில் இந்தத் திட்டத்தை மாற்றப்பட்ட வடிவத்தில் கொண்டுவருவதற்கான கதவுகளை திறந்து வைக்கும் திட்டம். தேர்தல் நிதிப்பத்திரங்களை கடுமையாக விமர்சித்த உச்ச நீதிமன்றம், அதை ரத்து செய்தது. இந்தத் திட்டம் குறித்து கவலை தெரிவித்த உச்ச நீதிமன்ற வல்லுநர்களுடன் கலந்தாய்வு செய்து, பேச்சு நடத்த வேண்டும் என்றது.

திருத்தப்பட்ட அரசியல் நன்கொடை கட்டமைப்பை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான சட்டமன்ற அதிகாரத்தை மத்திய அரசு இன்னும் வைத்துள்ளது, அரசியலமைப்பு கொள்கைகளுடன் ஒத்துழைத்து, தேர்தல் நிதியளிப்பில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பட்சத்தில் வரலாம். தேர்தல் நிதி பெறுவதற்காக எதிர்காலத்தில் மாற்றப்பட்ட வடிவில் தேர்தல் நிதிப் பத்திரங்களை கொண்டுவருவதற்கு மத்திய அரசு வழிஏற்படுத்துகிறது” எனத் தெரிவித்தார். ஷர்துல் அமர்சந்த் மங்கல்தாஸ் அன்ட் கோ பார்ட்னர் ரோஹித் கார்க் கூறுகையில் “ எஸ்பிஐ வங்கி தேர்தல் நிதிப்பத்திரங்கள் விற்பனையை நிறுத்த உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை பிரதிபலிக்கும் வகையில் திரது்தங்கள் செய்யப்பட்டுள்ளன. எதிர்காலத்தில்கூட தேர்தல் நிதிப்பத்திரங்கள் வேறுவடிவத்தில் வரலாம். நன்கொடையாளர்கள் பெயர் வெளிப்படையாக அறிவிக்கப்படுமா என்பதும், ஐடி சட்டத்தில் கொண்டுவரப்படுவார்களா என்பதுதான் கேள்வி” எனத் தெரிவித்தார். 2018ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேர்தல் நிதிப்பத்திரங்களை எஸ்பிஐ வங்கி மட்டும் 30 முறை ரூ.16,518 கோடிக்கு விற்பனை செய்துள்ளது. 8-வது பட்டியலின்படி ஒரு அரசியல் கட்சி வருமானவரி சலுகை பெற 6 விதமான நிபந்தனைகளை சந்திக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கிரிப்டோ வணிகம் செய்பவர்களே உஷார்! புதிய வருமானவரி மசோதாவில் கிடுக்கிப்பிடி..