தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் தற்போது நடத்தி வரும் போராட்டம் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்தப் போராட்டம் சென்னை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, சேலம், விழுப்புரம், நாகர்கோவில் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மிக முக்கியமான கோரிக்கை மாதாந்திர உதவித் தொகையை உயர்த்த வேண்டும் என்பதுதான். மாற்றுத் திறனாளிகள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளை முழுமையாகக் கைவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். உதவித்தொகை உயர்வு கோரி
மாற்றுத் திறனாளிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், நள்ளிரவில் கைது நடவடிக்கை என்ற பெயரில் திமுக அரசின் காவல்துறை மாற்றுதிறனாளிகள் என்றும் பாராமல், சென்னை முழுவதும் அலைகழித்து, வன்முறைத் தாக்குதல் நடத்தி அவர்களை கைது செய்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

காவல்துறையின் ஈவு இரக்கமற்ற தாக்குதலில் மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவரும், திமுக கூட்டணி கட்சியான சிபிஎம் கே. பாலகிருஷ்ணன் மனைவி ஜான்சிராணி படுகாயமைடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வருவதாக தெரிவித்தார். திமுக கூட்டணி கட்சித் தலைவரின் மனைவியே காவல்துறை தாக்குதலுக்கு ஆளாகும் நிலைதான் இன்று இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சொத்தை பழம் போல் பட்ஜெட்...! எல்லாம் ஏமாற்று வேலை... வறுத்தெடுத்த EPS..!
ஸ்டாலின் அரசு அனைத்து விதமான கோரிக்கைக் குரல்களை ஒடுக்கப் நினைப்பதுதான் திமுக-வினுடைய ஃபாசிஸ்ட் மனநிலைக்கான ஆதாரம் என தெரிவித்தார். ஜனநாயக விரோத, பாசிசப் போக்கைக் கொள்கையாகக் கொண்டு, மாற்றுத் திறனாளிகள் மீது கருணையின்றி நள்ளிரவு முழுவதும் அலைகழித்து , அடிப்படை உரிமைகளை கூட மறுத்து, தாக்குதல் நடத்தியுள்ள விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்வதாக கூறினார். மாற்றுத் திறனாளிகள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளை முழுமையாகக் கைவிட வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: சூடு பிடிச்சாச்சு..! ஜெ. பிறந்தநாளில் அதிமுக வேட்பாளர் பட்டியல்? திமுகவை முந்தும் EPS..!