• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “இது இரும்புடா தம்பி... ஒருத்தனும் அசைக்க முடியாது...” - ஆதவ் அர்ஜுனாவை விட்டு விளாசிய இபிஎஸ்...!

    அதிமுக ஆட்சியில் பல இடைத்தேர்தல் வந்தது, எதிலும் எதிர்க்கட்சி மீது பொய்வழக்கு போடவில்லை.
    Author By Amaravathi Mon, 28 Sep 2026 21:25:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    EPS slams aadhave arjuna

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து, குண்டடம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் பேசுகையில், ‘இந்த தேர்தல் எப்படி வந்தது, எதனால் வந்தது என்று உங்களுக்கு தெரியும். அதிமுகவில் வென்ற ஒருவர் குதிரை பேரத்தில் விலைபோய்விட்டார். அந்த துரோகிக்கு தக்க பாடத்தைப் புகட்டுவீர்களா?. நீங்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்தீர்கள். ஓட்டுப்போட்ட உங்களை மதிக்கவில்லை, உழைத்தவர்களையும் மதிக்கவில்லை. மக்களை நேசித்திருந்தால் விலைபோயிருக்க மாட்டார். மக்களைப் பற்றி கவலையில்லை, அவருக்கு வேண்டியது பெட்டி. உங்கள் வாக்கை விற்றுவிட்டார். இன்று அதே நபர் தான் நம்மை எதிர்த்து போட்டியிடுகிறார். அவருக்கு படுதோல்வியைக் கொடுங்கள். இனி எவருக்கும் இப்படிப்பட்ட எண்ணம் வரக்கூடாது என்பது போல பாடம் புகட்ட வேண்டும்.

    தவெக 108ல் தான் வென்றது. விஜய்கே நம்பிக்கையில்லை என்பதால் தான் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். திமுக, அதிமுக என எல்லா கட்சித் தலைவர்களும் ஒரு தொகுதியில் தான் போட்டியிட்டனர். எப்படியோ விபத்தினால் ஆட்சிக்கு வந்துவிட்டார். ஆட்சியைத் தக்கவைக்க குதிரை பேரத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யவைத்திருக்கிறார். தர்மம் நீதி நிச்சயம் வெல்லும். நியாயம், நீதி கேட்கத்தான் வந்திருக்கிறேன், நீதியை நிலைநாட்டுவீர்களா?. தீயசக்தி திமுக என்கிறார் விஜய், அதை நாங்கள் தான் சொன்னோம், எங்களைப் பார்த்துத்தான் இதை உச்சரிக்க ஆரம்பித்தார்.

    இதையும் படிங்க: பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.! இதுதான் காவல்துறை லட்சணமா.? EPS காட்டம்..!

    அந்த தீயசக்தியுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளுடன் தான் இவர் ஆட்சியையே நடத்துகிறார். அப்படியென்றால் தவெக தூய சக்தி அல்ல, தீயசக்தி. அவர் தூய சக்தி என்றால் திமுக கூட்டணிக் கட்சிகளை சேர்த்திருக்கக் கூடாது. காலத்துக்கேற்றவாறு நடிப்பவர் விஜய். எல்லா கூட்டங்களிலும் வீரவசனம் பேசுகிறார். உங்கள் வீட்டில் ஒருவராக இருப்பேன் என்கிறார், எவ்வளவு பச்சைப் பொய். பாசம் என்றால் தாய், தந்தை, கட்டிய மனைவி, பிள்ளையுடன் வாழ வேண்டும். அந்த தகுதி இருக்கிறதா? குடும்பம் பற்றி பேச தகுதி இருக்குதா? வசனம் பேசினால் போதாது, நிஜ வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்ட வேண்டும். நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    நான் பேசுவது உண்மைதானே, தவறாக எண்ணிவிடக் கூடாது. பாசம், குடும்பம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தவெக ஆட்சி அமைந்ததும் தமிழகத்தில் தேனாறும், பாலாறும் ஓடும் என கதை கட்டினார்.  என்ன நல்லது நடந்திருக்கிறது? விலைவாசி விண்ணை முட்டும் அளவு உயர்ந்துவிட்டது. எதைப்பற்றியும் அவருக்குக் கவலையில்லை. தினமும் கோட் சூட் போட்டு வருகிறார், போட்டோ, வீடியோ எடுக்கிறார்கள், மாலை ஓடிவிடுகிறார், சனி ஞாயிறு விடுமுறை. யாரும் பார்க்க முடியாது. இப்படிப்பட்ட முதல்வரை இங்கு தான் பார்க்க முடியும். 

    இன்று டெங்கு காய்ச்சல் அதிகம் பரவி வருகிறது. அண்ணா பல்கலை மாணவர் இறந்தார். இதை கண்டித்து அறிக்கை விட்டேன், காய்ச்சல் முகாம் நடத்தச் சொன்னேன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் என்ன சொல்றார், ஃபுல் பேன்ட் ஃபுல் கை சர்ட் போட்டால் கொசு கடிக்காதாம். அதிமுக ஆட்சியில் நீர் தேங்காத வகையில் பார்த்துக்கொண்டோம். நல்ல நீரில் தான் டெங்கு கொசு பரவுகிறது.

    உள்ளாட்சித்துறையும், மக்கள் நல்வாழ்வுத்துறையும் இணைந்து பணியாற்றினோம். எனது ஆட்சியில் டெங்கு காய்ச்சலை மர்ம காய்ச்சல் என்று சொன்னேனாம், நான் அப்படிச் சொல்லவே இல்லை. இவராகச் சொல்கிறார். அப்போதெல்லாம் இவர் வேறு மாநிலத்தில் இருந்தார். அவர் இங்கு பொறுப்பாளராக போடப்பட்டிருக்கிறார். அவருக்கு என்ன அரசியல் தெரியும்? அவர் அதிமுகவினரை நேரில் பார்த்து தவெகவுக்கு கூவிக்கூவி அழைக்கிறார். 

    இன்னொருவர் வருவாய்த்துறை அமைச்சர், அதிமுகவினர் இல்லங்களுக்குச் சென்று பிச்சை எடுப்பது போல, இரவு நேரத்தில் கூவிக்கூவி அழைக்கிறார். வாக்காளர்களை போய் பாருங்கள், எங்க கட்சிக்காரர்களை ஏன் பார்க்கிறீர்கள். ஏனென்றால் தவெகவிலும், திமுகவிலும் பாதி பேர் அதிமுகவினர் தான். எல்லா கட்சியிலும் அதிமுகவினர் தான், தமிழகத்தை ஆள்வதே அதிமுககாரன் தான். அதிமுகவில் பயிற்சி எடுத்து, ஒவ்வொரு கட்சியிலும் டெபுடேஷனில் வேலை பார்க்கிறார்கள். 

    ஆதவ் அர்ஜுனா தவெகவுக்குப் போய் 2 வருடம் தான் ஆகுது. அங்கு போய் அதிமுகவை விமர்சிக்கிறார், அதிமுகவை கரைத்துவிடுவாராம், இது என்ன சர்க்கரையா கரைவதற்கு? இது இரும்புடா தம்பி இரும்பு. ஒருத்தனும் அசைக்க முடியாது. இபிஎஸ் எடப்பாடியில் விஜய் பிரசாரம் செய்திருந்தால் தோற்றுப்போயிருப்பார் என்கிறார், ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளரவில்லை. எடப்பாடி எப்படிப்பட்ட தொகுதி தெரியுமா?. 2024 கூட்டணி இல்லாதபோதே 45 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்ற தொகுதி. உங்கள் தலைவர் சுதந்திரம் வாங்கி கொடுத்தவரா? என்ன சாதனை செய்தார்..?. 70 படம் நடித்திருக்கிறார், அப்போது கூட தேசிய விருது வாங்க முடியவில்லை. அரசியலில் எங்களை வீழ்த்த வேண்டும் என்று எண்ணினால் நீங்கள் காணாமல் போய்விடுவீர்கள்.

    அதிமுக பல தேர்தலை சந்தித்துள்ளது வெற்றியில் இறுமாப்புடன் இருப்பதில்லை, தோல்வியில் துவண்டுவிடுவதுமில்லை. ஆட்சி இருந்தாலும் இல்லாவிட்டாலும் சோதனை வந்தாலும் அதையே படிக்கட்டு ஆக்கி வெற்றி பெறும் கட்சி. அதிமுக நிர்வாகிகள் மீது பொய்வழக்கு போடுகிறார்கள், காவல்துறையினரே நடுநிலையோடு நடந்துகொள்ளுங்கள்… இந்த ஆட்சி நிலைக்காது. எது செய்தாலும் பாதிக்கப்படப்போவது ஆட்சியாளர்கள் அல்ல, நீங்கள் தான். நீங்கள் முடக்க நினைத்தால் முடக்க முடக்க எகிறி மேலே வருவோம். நான் 7 முறை மக்களுக்காக சிறை சென்றிருக்கிறேன், உங்க தலைவர் அப்படியா? வழக்குப் போட்டுவிட்டால் பயந்துவிடுவோமா? ஆட்சி மாறும் போது காட்சி மாறும். நானும் முதல்வராக இருந்தேன் இப்படியெல்லாம் செயல்படவில்லை.

    அதிமுக ஆட்சியில் பல இடைத்தேர்தல் வந்தது, எதிலும் எதிர்க்கட்சி மீது பொய்வழக்கு போடவில்லை. திமுக ஆட்சியிலும் இப்படி கைது நடவடிக்கை எடுக்கவில்லை. ஜனநாயக முறைப்படி வாக்கு கேட்கும் நிலைதான் இருந்தது. ஆனால் தோல்வி பயத்தில் தேர்தல் பணி செய்யவிடாமல் கைது செய்வது கண்டனத்துக்குரியது. இப்போது எச்சரிக்கிறேன், உங்கள் தலைவர் இங்கு வருவார் அப்போது நானே களத்தில் இறங்கி போராட்டத்தை நடத்துவேன். மிரட்டிப் பார்க்கிறீர்களா? நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரியும்.

    கரூர் துயரம் நடந்து ஓராண்டு ஆனது. இறப்புக்கும், காயம் பட்டவர்களை பார்க்கவும் ஒருவரும் நேரில் செல்லவில்லை. அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. சிபிஐ விசாரணை நடக்கிறது. நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும்போது தவெக இருக்குமா, இருக்காதா என்பது அப்போது தெரியும். 72 நாட்கள் வீட்டை விட்டே வரவில்லை, இப்படிப்பட்ட தலைவரை வைத்து எங்களை மிரட்டுகிறீர்களா?. அப்போது இரண்டாம் கட்டத் தலைவர்களும் காணாமல் போய்விட்டனர். நான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினேன். எல்லா கட்சியினரும் அஞ்சலி செலுத்தினார்கள். இனியாவது, மிரட்டலை விடுத்து நேர்மையாக நடந்துகொள்ளுங்கள். அதுதான் நல்லது என பேசினார். 

    இதையும் படிங்க: ஜெம் வீரமணி விவகாரம்..! அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள்...! EPS ஆதங்கம்..!!

    மேலும் படிங்க
    மக்கள் ஓட ஓட விரட்டுகிறார்கள்; துரோகத்தின் அடையாளம் நீங்கள்: மதுராந்தகத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!

    மக்கள் ஓட ஓட விரட்டுகிறார்கள்; துரோகத்தின் அடையாளம் நீங்கள்: மதுராந்தகத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!

    தமிழ்நாடு
    தம்பி விஜய் அவர்களே, இந்த சினிமா ஷூட்டிங் அரசியல் ரொம்ப நாளைக்கு ஓடாது: கனிமொழி எச்சரிக்கை!

    தம்பி விஜய் அவர்களே, இந்த சினிமா ஷூட்டிங் அரசியல் ரொம்ப நாளைக்கு ஓடாது: கனிமொழி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தேவதாசி முறைக்கு ஆதரவான கருத்துகளை புறக்கணிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மு.வீரபாண்டியன் காட்டம்!

    தேவதாசி முறைக்கு ஆதரவான கருத்துகளை புறக்கணிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மு.வீரபாண்டியன் காட்டம்!

    அரசியல்
     “உங்களுக்கு வெட்கம், மானம், சூடு சொரணை இல்லையா?”... தவெகவுக்கு தாவியவர்களை விளாசித் தள்ளிய பிரேமலதா...!

    “உங்களுக்கு வெட்கம், மானம், சூடு சொரணை இல்லையா?”... தவெகவுக்கு தாவியவர்களை விளாசித் தள்ளிய பிரேமலதா...!

    அரசியல்
     “இனி விஜய் எனக்கு அன்பு தம்பி...” - உறவுமுறை சொல்லி ‘ஸ்வீட்’ பதிலடி கொடுத்த கனிமொழி...!

    “இனி விஜய் எனக்கு அன்பு தம்பி...” - உறவுமுறை சொல்லி ‘ஸ்வீட்’ பதிலடி கொடுத்த கனிமொழி...!

    அரசியல்
    தாம்பரம் விமானப்படை தளத்தில் அகில இந்திய வாயு சைனிக் முகாம்: 646 என்சிசி மாணவர்கள் பங்கேற்பு!

    தாம்பரம் விமானப்படை தளத்தில் அகில இந்திய வாயு சைனிக் முகாம்: 646 என்சிசி மாணவர்கள் பங்கேற்பு!

    இந்தியா

    செய்திகள்

    மக்கள் ஓட ஓட விரட்டுகிறார்கள்; துரோகத்தின் அடையாளம் நீங்கள்: மதுராந்தகத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!

    மக்கள் ஓட ஓட விரட்டுகிறார்கள்; துரோகத்தின் அடையாளம் நீங்கள்: மதுராந்தகத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!

    தமிழ்நாடு
    தம்பி விஜய் அவர்களே, இந்த சினிமா ஷூட்டிங் அரசியல் ரொம்ப நாளைக்கு ஓடாது: கனிமொழி எச்சரிக்கை!

    தம்பி விஜய் அவர்களே, இந்த சினிமா ஷூட்டிங் அரசியல் ரொம்ப நாளைக்கு ஓடாது: கனிமொழி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தேவதாசி முறைக்கு ஆதரவான கருத்துகளை புறக்கணிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மு.வீரபாண்டியன் காட்டம்!

    தேவதாசி முறைக்கு ஆதரவான கருத்துகளை புறக்கணிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மு.வீரபாண்டியன் காட்டம்!

    அரசியல்
     “உங்களுக்கு வெட்கம், மானம், சூடு சொரணை இல்லையா?”... தவெகவுக்கு தாவியவர்களை விளாசித் தள்ளிய பிரேமலதா...!

    “உங்களுக்கு வெட்கம், மானம், சூடு சொரணை இல்லையா?”... தவெகவுக்கு தாவியவர்களை விளாசித் தள்ளிய பிரேமலதா...!

    அரசியல்
     “இனி விஜய் எனக்கு அன்பு தம்பி...” - உறவுமுறை சொல்லி ‘ஸ்வீட்’ பதிலடி கொடுத்த கனிமொழி...!

    “இனி விஜய் எனக்கு அன்பு தம்பி...” - உறவுமுறை சொல்லி ‘ஸ்வீட்’ பதிலடி கொடுத்த கனிமொழி...!

    அரசியல்
    தாம்பரம் விமானப்படை தளத்தில் அகில இந்திய வாயு சைனிக் முகாம்: 646 என்சிசி மாணவர்கள் பங்கேற்பு!

    தாம்பரம் விமானப்படை தளத்தில் அகில இந்திய வாயு சைனிக் முகாம்: 646 என்சிசி மாணவர்கள் பங்கேற்பு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share