தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்துக்கு பின், 2017 பிப்ரவரியில், இடைப்பாடி தொகுதி, எம்.எல்.ஏ.,வான, பழனிசாமி முதல்வராக பதவியேற்றார். இவர்கள் தலைமையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்ட மதுசூதனன், 40,000 ஓட்டுகள் வித்தியாசத்தில், 2ம் இடத்தையே பிடித்தார். சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றார். 2019ம் ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளிலும், அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக, 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
அதே ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும் அதிமுக தோல்வியைத் தழுவியது. 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை, ஸ்டாலினிடம் பறிகொடுத்தனர். தொடர்ந்து நடந்த, ஊரகம் மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும், அ.தி.மு.க., படுதோல்வியை சந்தித்தது. இதனால் டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றவர்கள் எல்லாம் எடப்பாடி பழனிசாமியை பத்து தோல்வி பழனிசாமி என கிண்டல் அடிக்கவே ஆரம்பித்துவிட்டனர்
2022ம் ஆண்டு நடந்த ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல், 2024யில் நடந்த மக்களவைத் தேர்தலிலும் அதிமுக படுதோல்வியையேச் சந்தித்தது. தற்போது பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க அதிமுக தயாராகி வருகிறது. இந்த தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.அதன்படி இந்த விருப்ப மனு கடந்த டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து முதல் நாளில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் ஆராவாரத்துடன் வந்து தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க: வாக்குறுதியை நிறைவேற்ற வக்கில்ல... போராட விட்டு வேடிக்கை பார்ப்பதா? இபிஎஸ் கண்டனம்...!
மேள தாளம் முழங்க, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா போல் வேடமணிந்த கலைஞர்களை அழைத்து வந்து தடபுடலாக விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். முதல் நாளில் 1,300 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்த நிலையில், அடுத்த நாளே அது 64 ஆக குறைந்து போனதைக் கேள்விப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செம்ம டென்ஷன் ஆகிவிட்டார்.
ஜெயலலிதா காலத்தில் விருப்ப மனு தாக்கல் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் குவியும், எனவே இந்த முறை எப்படியாவது 10 ஆயிரம் பேரையாவது விருப்ப மனு தாக்கல் செய்ய வைக்க வேண்டும் என எடப்பாடி தரப்பு திட்டமிட்டுள்ளது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு விருப்ப மனு தாக்கல் சூடுபிடிக்கவில்லையாம். ஜெயலலிதா இருந்தவரை அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட கட்சியினர் போட்டி போட்டு விருப்பமணு அளிப்பார்கள். கடந்த 2011 2016 சட்டசபை தேர்தல்களில் தொடர்ந்து அதிமுக வென்றது. அப்போது 20ஆயிரத்திற்கும் அதிகமானோர் விருப்பமணு அளித்திருந்தனர்.
அதிலும் 234 தொகுதிகளிலும் ஜெயலலிதா போட்டியிட ஆயிரக்கணக்கானோர் விருப்பமணு அளிப்பது வழக்கமாக இருந்தது. இப்போது எடப்பாடி தொகுதியில் பழனிச்சாமி போட்டியிட மாவட்ட செயலாளர்கள் உட்பட சில 100 பேர் மட்டுமே மணு அளித்துள்ளதாக தெரிகிறது. மற்றபடி பெரிய ஆர்வம் யாரிடமும் இல்லையாம். 23 ஆம் தேதி காலக்கேடு முடிந்த நிலையில் 9000 பேர் மட்டுமே விருப்பமணு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவேதான் 31 ஆம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்திருப்பதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின், இபிஎஸ்-ஐ சந்திக்கும் தேமுதிக நிர்வாகிகள்! பிரேமலதா போடும் மாஸ்டர் ப்ளான்!