விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவெண்ணெய்நல்லூர் மற்றும் சித்தலிங்கமடம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு இன்று விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்: திமுகவினர் பயத்தால் தான் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குகிறார்கள் என்ற எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் குறித்த கேள்விக்கு?, அவருக்கு எப்போதுமே பயம், அவர் வரவே முடியாது என்பதை அவரே முடிவு செய்துவிட்டார். குறிப்பாக பாஜக அடிமையாக இருக்கிறார். முதலிலேயே சொன்னது போல் அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லுவார், ஆனால் கல்வி வளர்ச்சிக்காக உண்மையிலேயே உழைத்தது தமிழ்நாடு முதலமைச்சர் தான்.
சைக்கிளாக இருந்தாலும் சரி மற்ற நிகழ்வுகளாக இருந்தாலும், லேப்டாப்பாக இருந்தாலும் கூட மாணவர்களுக்கு உண்மையிலேயே சென்றடைய வேண்டும். கல்வி வளர்ச்சிக்காக படிக்கின்ற மாணவர்கள் படிக்கின்ற பொழுதே தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழக முதலமைச்சர் கொண்டு வருகின்ற இந்த திட்டத்தை யார் வேண்டுமானாலும் குறை சொல்லட்டும். அவர் சொல்வதைப் பற்றி நாம் கவலைப்படவே தேவையில்லை.
இதையும் படிங்க: பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்? டெல்லி செல்லும் நயினார் இபிஎஸ் உடன் திடீர் சந்திப்பு...!
மக்கள் அவரை புறக்கணித்து விட்டார்கள். அதனால்தான் அவர் என்னென்னமோ சொல்லிக் கொண்டிருக்கிறார். முதலமைச்சர் கடந்த நான்காண்டு செய்த சாதனையை மக்கள் பார்கிறார்கள். கல்வித்துறையாக இருந்தாலும் மருத்துவத்துறையாக இருந்தாலும் எல்லா துறைகளிலும் முதலமைச்சர் செய்துள்ள சாதனையை மக்கள் நன்கு அறிவார்கள், எடப்பாடி என்கிற துதிப்பாடியின் பேச்சு எப்போதும் எடுபடாது என்றார்.
இதையும் படிங்க: அதிமுகவினர் கவனத்திற்கு..! ELECTION- ல போட்டியிடனுமா? விருப்ப மனுக்கள் தொடர்பாக இபிஎஸ் முக்கிய அறிவிப்பு...!