பாஜக - அதிமுக இடையிலான கூட்டணி முறிந்த போது அக்கட்சியை கடுமையாக விமர்சித்தவர்களில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகமும், ஜெயக்குமாரும் முதன்மையானவர்கள். இதில் உச்சக்கட்டமாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “பாஜக இன்னும் தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பிற்கே வரவில்லை. நம்முடைய தயவால், நாம் போட்ட பிச்சை நாலு எம்.எல்.ஏ-க்கள்” என்றெல்லாம் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக 2021 சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவ பாஜகவுடன் கூட்டணி வைத்ததே காரணம் என அதிமுக சீனியர்கள் வெளிப்படையாகவே விமர்சித்தனர்.
இதை படு ஓபனாகவே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருந்தார். "ராயபுரத்தில் ஐந்து முறை வெற்றி பெற்றிருக்கிறேன். பாஜக உடன் சேர்ந்ததால் தொகுதியில் உள்ள நாற்பதாயிரம் சிறுபான்மையினர் ஓட்டுகள் விழவில்லை" எனக்கூறியிருந்தார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு நடந்த முதல் இடைத்தேர்தலில் இதே கருத்தை முன்வைத்து பாஜகவை விமர்சித்தார்.
பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் இஸ்லாமியர்களின் வாக்கு கிடைக்காது என்பதால், அதிமுகவில் உள்ள பல சீனியர்கள் தங்களது சொந்த தொகுதியில் மீண்டும் களமிறங்கவே அச்சப்படுகிறார்களாம்.
இதையும் படிங்க: கண்ணீர் விட்டு கதறும் விவசாயிகள்... கையாலாகாத அரசு...! விளாசிய இபிஎஸ்...!
ஜெயகுமார், சி.வி. ஷண்முகம் உள்ளிட்ட பல சீனியர்கள் அவங்களோட சொந்த தொகுதிகளில் போட்டியிடவே தயங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வேற தொகுதிகளை தேட தொடங்கி இருக்கிறார்களாம். இருப்பினும், அந்த சீனியர்களை தேர்தல் சமயத்தில் சமாளித்து அவங்க தொகுதியிலேயே போட்டியிட வைக்கிறது என அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் அது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. கடைசி நேரத்தில தலைமையோட கட்டளையை கேட்டுக்கிட்டு அதே தொகுதிகள்ல ஜெயக்குமார் சண்முகம் மாதிரியான சீனியர்கள் நின்னாலும் ஜெயிக்க முடியுமான்னு யோசிக்கிறாங்களாம்.
இதையும் படிங்க: மோடிக்கே அல்வா... அவருக்கு தெரிஞ்ச ஒரே வேலை அது தான்! EPS- ஐ பந்தாடிய திமுக...!