வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
அரசியல்

நெருங்கும் சித்திரை முழு நிலவு மாநாடு; ராமதாஸ் – அன்புமணி மோதல் சரியாகிவிட்டதா? ஜிகே மணி சொல்வது என்ன?

ராமதாஸ் அன்புமணி இடையே சிறு சலசலப்பு தற்போது சரியாகிவிட்டதாக பாமகவின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

பாமகவில் கடந்த சில நாட்களாக உட்கட்சிபூசல் இருந்து வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த 10 ஆம் தேதியன்று கட்சியின் தலைவராகவும், நிறுவனராகவும் தானே பொறுப்பு வகிக்க உள்ளதாக அறிவித்தார். மேலும் அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக மட்டும் இருப்பார் என்றும் தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இதனிடையே அன்புமணி, தானே தலைவராக செயல்படுவேன் என்று அறிக்கை வெளியிட்டார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை கட்சியின் முக்கிய நிர்வாகிகள், குடும்பத்தினர் சந்தித்துப் பேசினர்.

மேலும் பாமக இளைஞரணி தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட முகுந்தன், அன்புமணியை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, பாமகவில் நடப்பது எங்களுடைய உட்கட்சி விவகாரம், எங்களுக்குள் நாங்கள் பேசிக்கொள்வோம். ஐயா ராமதாஸ் வழிகாட்டுதலுடன், அவருடைய கொள்கையை நிலைநாட்ட, பாமகவை ஒருக்கட்டத்தில் ஆளும்கட்சியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கடுமையாக அனைவரும் உழைப்போம் என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: “அரசியல் அரைவேக்காடு” திலகபாமா கட்சியை விட்டு வெளியேற வேண்டும்… பாமக பொதுச்செயலாளர் அதிரடி…!

இதுஒருபுறம் இருக்க மறுபுறம் வரும் மே 11 ஆம் தேதி மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் பாமக சித்திரை முழுநிலவு மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அன்புமணி ராமதாஸ் முன்னின்று மேற்கொண்டு வருகிறார். இந்த மாநாட்டில் ராமதாஸும் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. கட்சியில் ஏற்கனவே மோதல்போக்கு நிலவி வரும் நிலையில் இருவரும் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்தது. இதனை தெளிவுப்படுத்தும் விதமாக பாமகவின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி ஒரு தகவலை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், மாமல்லபுரத்தில் மே 11ஆம் தேதி நடக்க உள்ள பாமக மாநாட்டில் ராமதாஸ், அன்புமணி இருவருமே கலந்துகொள்வார்கள். இரண்டு தலைவர்களிடமும் பேசிக் கொண்டிருக்கிறேன். விரைவில் சுமூகமான நிலை ஏற்படும். ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே சிறு சலசலப்பு இருந்தது. அது தற்போது சரியாகிவிட்டது. அனைத்துக் கட்சியிலும் சலசலப்பு என்பது சாதாரணம் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் பாமகவில் இருந்து வந்த மோதல் போக்கு சரியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு ராமதாஸ் மரியாதை..! பாமக தொண்டர்கள் முழக்கம்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी