திருப்பரங்குன்றம் அருகே த வெ க பிரமுகர் நடத்திய குவாரிக்கு 7.5 கோடி ரூபாய் அபராதம் விதித்து திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு. அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக சட்ட விரோதமாக கற்களை வெட்டி கடத்திய புகாரின் அடிப்படையில் வட்டாச்சியர் நடவடிக்கை. அதிமுகவிலிருந்து ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் தமிழக வெற்றி கழகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் முன் இணைந்த மதுரை திருப்பரங் குன்றம் பாரி மற்றும் முருகேசன் ஆகியோருக்கு அபராதம்.. 54 ஆயிரம் கனமீட்டர் கற்கள் 24 கன மீட்டர் கிராவல் மண் முறைகேடாக எடுத்ததில் தவெக பிரமுகருக்கு அபராதம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் அடுத்த கருவேலம்பட்டியில் பட்டா நிலத்தில் முருகேசன் என்பவர் குவாரி நடத்த கடந்த 2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் குவாரி நடத்த அனுமதி பெற்றனர்.,
பின்னர் அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக கற்கள் மற்றும் கிராவல் மண்ணை தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பாரி மற்றும் முருகேசன் ஆகியோர் கனி வளத்துறையினர் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக சட்ட விரோதமாக குவாரியில் கற்களை வெட்டியெடுத்தனர்.
இதையும் படிங்க: 2 தொகுதியில் இடைத்தேர்தல்! 11 அமைச்சர்களை களமிறக்கிய முதல்வர் விஜய்! தவெக தேர்தல் வியூகம் குறித்து பரபரப்பு!
இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் நிலையூர் அடுத்த கருவேலம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக 54,084.02 கன மீட்டர் கற்கள் மற்றும் 23,689.42 கன மீட்டர் கிராவல் மண்ணை வெட்டி கடத்தி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய தமிழக வெற்றிக்கழகத்தைச் சேர்ந்த பாரி மற்றும் முருகேசன் ஆகிய இருவருக்கும் 7.5 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளார்.
திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த தவெகா பிரமுகர் பாரி முன்பு அதிமுகவில் இருந்தார் த வெகா வெற்றி பெற்றதும் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் பாரி மற்றும் அவரது மருமகன் அரவிந்த் தவெகவில் இணைந்தனர். ரூ.7.5 கோடி அபராத தொகையை கனிம வளத்துறையின் வங்கி கணக்கில் செலுத்தவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பதவியை ராஜினாமா செய்தது ஏன்.? தவெக எதற்கு..? மனம் திறந்த மரகதம் குமரவேல்..!!