கிருஷ்ணகிரியில் திமுக நகர்மன்ற தலைவரை மாற்றுவதற்கான தீர்மானத்தில் கையெழுத்திட அதிமுக கவுன்சிலர் ஒருவரை பேருந்தில் கடத்திச் சென்றதாக கூறி கட்சியினர் பேருந்தின் கண்ணாடியை உடைத்து ரகளையில் இடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவரை மாற்றக்கோரி நகர்மன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. கிருஷ்ணகிரி நகராட்சி நகர்மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த பரிதா நவாப் என்பவரும் அதே போல துணை தலைவராக சாவித்திரி என்பவரும் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக திமுக நகரமன்ற உறுப்பினர்களுக்கும் தலைவர் பரிதா நவாப்பிற்கும் இடையே மோதல் போக்கு நிலைவி வந்ததுள்ளது. நகரமன்ற தலைவரான பரிதா நவாப்பை மாற்ற வேண்டும் என கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி 23 திமுக கவுன்சிலர்கள் ஒன்று சேர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என நகராட்சி ஆணையாளரிடம் மனு அந்த மனுவியின் அடிப்படையில் இன்று வாக்கெடுப்பானது நடைபெறுகிறது.
இதையும் படிங்க: பாஜகவின் 'புது ஆயுதம்'... அதிமுகவின் 'கபட நாடகம்' ... NDA கூட்டணியை போட்டு பொளந்தெடுத்த ஸ்டாலின்...!
இந்த சூழலில் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற மொத்தம் உள்ள 33 கவுன்சிலர்களில் 27 பேர் ஆதரவு தேவைப்படுகிறது. 24 திமுக கவுன்சிலர்கள் ஒரு காங்கிரஸ் கவுன்சிலர், ஒரு சுயேச்சை, ஒரு அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஒரு அதிமுக கவுன்சிலரான நாகஜோதியை திமுக.,வினர் மனமாற்றம் செய்து நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு அழைத்துச் சென்றதாக கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் தலைமையில் கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு இன்று நடைபெறும் நிலையில் கடந்த இரு தினங்களாக நகர்மன்ற உறுப்பினர்கள் சுற்றுலா சென்ற விட்டு, இன்று காலை மீண்டும் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் வந்த பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
இன்ப சுற்றலா சென்றுவிட்டு இன்று வாக்கெடுப்பிற்காக நகராட்சி அலுவலகத்தில் ஒரே பேருந்தில் வந்த கவுன்சிலர்களை அதிமுகவினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேருந்தில் இருந்த அதிமுக கவுன்சிலரை கீழே இறக்கி விட கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பேருந்தின் பக்கவாட்டில் இருந்த கண்ணாடியை உடைத்தனர். இதனையடுத்து திமுக அதிமுகவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான அசோக் குமார் கடத்திச் சென்ற எங்களது அதிமுக உறுப்பினரை வெளியே விடக்கூறி கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வாயிலில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
தற்போது நகராட்சி அலுவலகத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பிற்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதி முழுவதும் மிகுந்த பரபரப்பாக காணப்படுகிறது.
இதையும் படிங்க: 2006-ல் கோட்டை விட்டதை 2026 - ல் பிடிக்க மாஸ்டர் பிளான் ... திமுகவுக்கு செக் வைக்கும் காங்கிரஸ்...!