வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

#BREAKING: பாமக பிரமுகர் ம.க.ஸ்டாலினை கொல்ல முயற்சி.. பெட்ரோல் குண்டு வீசிய மர்ம கும்பல்..!

பாமக பிரமுகர் ம.க. ஸ்டாலினை கொல்ல பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாமக பிரமுகரும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம. க. ஸ்டாலின் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சி நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவருடன் சென்ற இரண்டு பேரை அறிவாளால் வெட்டி நிகழ்வு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ம. க. ஸ்டாலின், பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய உறுப்பினராக, தஞ்சாவூர் பகுதியில் கட்சியின் அமைப்பு பணிகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

பாமக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வன்னியர் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக ராமதாஸால் 1989இல் தொடங்கப்பட்ட அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சியின் கொள்கைகளுக்கு ஏற்ப, ம. க. ஸ்டாலின் உள்ளூர் மட்டத்தில் கட்சியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், குறிப்பாக வன்னியர் சமூகத்தின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளராக, கட்சியின் அமைப்பு ரீதியான பணிகளை ஒருங்கிணைப்பதோடு, உள்ளூர் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை ஒருங்கிணைத்து, பாமகவின் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கு உழைத்து வருகிறார்.ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தலைவராக ம. க. ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்பில் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு முக்கிய பங்களிப்பு அளித்து வருகிறார். 

இதையும் படிங்க: அடங்காத புகைச்சல்… அசராத அன்புமணி! விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என பேச்சு

இதனிடையே, பேரூராட்சி அலுவலகம் சென்ற வழியில் ம. க. ஸ்டாலின் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அவருடன் சென்ற 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததாக கூறப்பட்டுள்ள நிகழ்வு பாமகவினர் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: வரும் 10ம் தேதி வரைக்கும்தான் டைம்! மீண்டும் அன்புமணிக்கு கெடு விதித்த ராமதாஸ்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी