இனிய வரும் இரண்டு மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும், எஸ்.ஐ.ஆர் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்குதல், சேர்த்தல் ஆகியவற்றை கவனமாக செய்ய வேண்டும். திமுக ஆட்சி குறித்து மக்களிடையே குறை ஏதும் கூற முடியாத அளவிற்கு நல்ல பெயர் உள்ளதால் இனி வரும் இரண்டு மாதங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் , திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுகவின் வாக்குச்சாவடி முகவர்களின் ஆலோசனை கூட்டம் கும்பகோணத்தில் இன்று நடைபெற்றது .
திமுக மண்டல பொறுப்பாளரும் ,நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் 800 க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: இது பெண்களுக்கான அரசா? கூச்சமா இல்லையா? வெட்கப்படுங்க ஸ்டாலின்! EPS காட்டம்...!
இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது, திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள்
இனி வரும் இரண்டு மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும், மற்ற தேர்தலை போல் இல்லாமல் இந்த தேர்தல் முற்றிலும் மாறுபட்டது. எஸ்ஐஆர் படிவங்களை கவனமாக கையாள வேண்டும். பெயர் நீக்குதல், சேர்த்தல் ஆகியவற்றை சரியாக செய்ய வேண்டும் .
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2002 வாக்காளர் பட்டியலுடன் தற்போதுள்ள பட்டியலை ஒப்பிட்டு பார்க்கும்போது 45 சதவீத அளவிற்கு பொருந்துவதாக உள்ளது என்றும் , எஸ் ஐ ஆர் தொடர்பான படிவங்கள் 12 லட்சம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்திருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தன்னிடம் தெரிவித்ததாகவும் கே என் நேரு மேலும் தெரிவித்தார்.
வட மாநில தொழிலாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதை கவனமாக கையாள வேண்டும். தமிழக மக்களிடையே திமுக ஆட்சி குறித்து குறை ஏதும் சொல்ல முடியாத அளவிற்கு நல்ல பெயர் உள்ளது . இதனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் . எது இருந்தாலும் வாக்கு (vote) இருந்தால் தான் நாம் வெற்றி பெற முடியும் . எனவே இனிவரும் இரண்டு மாதங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் கவனமாகவும், கடுமையாகவும் உழைக்க வேண்டும் என கே என் நேரு தெரிவித்தார் .
இனிவரும் இரண்டு மாதங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் உண்மையாகவும்,கவனமாகவும் செயல்பட்டால் மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்கும், தளபதி மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார். இதை யாராலும் தடுக்க முடியாது என கே.என்.நேரு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், துரை சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: எங்களுக்கு வேண்டாம்! SIR தமிழ்நாட்டுக்கு பாதகம்... திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு...!