புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் பூங்கா முன்பு அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவி குழுவினரால் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மதி அங்காடியை தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் இதில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் உள்ளிட்டரும் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில்: SIR குறித்து ஏற்கனவே திமுக அதன் தோழமைக் கட்சிகளின் கூட்டத்தை கூட்டி அதில் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட நவம்பர் இரண்டாம் தேதி முடிவு செய்துள்ளார். அதில் அனைத்து கட்சிகளின் கருத்துக்களும் பதிவு செய்யப்படும். அதன் பிறகு தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறுபான்மையினர் மக்களை ஒட்டுமொத்தமாக வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அவர்களை நீக்குவதற்கும் தேர்தல் ஆணையத்தின் மூலமாக ஒன்றிய அரசு மேற்கொண்டு இருக்கிறது. இதை எந்த காலத்திலும் திமுக கேட்கவில்லை. ஏற்கவில்லை. பீகாரிலும் இதுபோன்றுதான் நடந்துள்ளது.
இதையும் படிங்க: நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.888 கோடி ஊழல்? அம்பலப்படுத்திய ED... அண்ணாமலை கடும் விமர்சனம்...!
இந்தியாவில் தொடர்ந்து அகதிகளாக வந்து இங்கேயே இருக்கக்கூடிய நம்முடைய இலங்கை தமிழர்கள் போன்றவர்கள் பிற நாடுகளில் இருந்து வந்தவர்கள் எல்லாம் குடியுரிமை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கு நாம் இங்கு வீடு வசதி ரேஷன் பொருட்கள் அனைத்தும் கொடுத்து வருகிறோம். ஆனால் அவர்களுக்கு இங்கு குடியுரிமை கிடையாது. 11 ஆண்டுகள் 12 ஆண்டுகள் இருந்து அவருடைய மூதாதையர்கள் இந்தியாவில் இருந்த ஆதாரத்தை நிறுவித்தாள் கூட அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது கிடையாது. ஒரு வாக்காளரை இந்திய குடிமகனா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியது இந்தியன் சிட்டிசன் ஆக்ட் 1955. ஆனால் இந்திய குடிமகனா இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது ஒட்டுமொத்தமாக நமது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
ஆதாரை ஏற்றுக்கொள்வது என்பது வேறு. அதே நேரத்தில் ஒருவரை இந்திய குடிமகனா இல்லையா என்று தீர்மானிக்கக்கூடிய சக்தியை இவர்களுக்கு யார் கொடுப்பது. ஆதார் வைத்திருப்பவர்கள் இந்திய குடிமகன் தானே, அப்புறம் ஏன் தேர்தல் ஆணையம் தான் இந்தியாவின் குடிமகனா இல்லையா என்பதை தீர்மானிக்கும் என்று சொல்வது ஏன் இது நிச்சயம் தவறு செய்யக்கூடிய முன்னோட்டமாக அமைந்திருக்கிறது. 
இதுகுறித்து நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய வழக்குகளில் நாங்களும் சேர்ந்துள்ளோம் நூற்றுக்கும் இயக்கங்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். மோந்தா புயல் தாக்கியுள்ளது. பலத்த காற்று மற்றும் கனமழையால் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு புயலிலும் இல்லாத அளவுக்கு உப்படாவில் கடல் சீற்றம் அடைந்துள்ளது. புயல் கரையைக் கடந்த பிறகும், வானிலை ஆய்வு மையம் கனமழை குறித்து புதிய எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. பள்ளிகளுக்கு 31 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில், அரசு அதிகாரிகளை எச்சரித்துள்ளது. இன்று..நாளை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க அறிவுறுத்தியுள்ளது என்றார். 
2026 தேர்தலுக்குப் பிறகு பாஜக தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போகுமே தவிர எங்களது தலைவரோ திமுகவோ காணாமல் போவாது. மீண்டும் திமுகவின் 2.0 தொடரும். விஜயின் வெறுப்பை இதுபோன்று வெறுப்பை வெளிப்படுத்தி இருக்கிறாரே தவிர பொதுமக்கள் மத்தியில் எந்த ஒரு வெறுப்பும் இல்லை. விவசாயிகள் இழப்பீடு ஏற்படும் பொழுது அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் யாரும் பாதிக்கப்பட்டதாக சொல்லவில்லை. 
நயினார் நாகேந்திரன் அவருக்கு கொடுத்த தலைவர் என்ற பதவியை தக்க வைப்பதற்காக எதை வேண்டுமென்றாலும் பேசி வருகிறார், புதிய கூட்டணிகள் அவர்களிடத்தில் செல்ல போவதில்லை. கேரளா பிஎம்சி திட்டத்தில் சேர்த்ததைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை எங்களது கொள்கையைத்தான் நாங்கள் சொல்ல முடியும்
என்று தெரிவித்தார். 
இதையும் படிங்க: “தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி” - பகீர் குற்றச்சாட்டை முன்வைத்த கரூர் எம்.பி. ஜோதிமணி...!