வி.ஐ.பி.களுக்குக் கோயில்களில் முன்னுரிமை அளிக்கப்படுவது மற்றும் அது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் பேசப்பட்ட விவகாரம் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். ஊடகங்கள் ஒரு விஷயத்தை எதிராகப் பேசும்போது, நேர்மையாகவும் பேச வேண்டும் என்று அவர் அன்போடு கேட்டுக்கொண்டார்.
"செய்திகள் எப்போது வேண்டுமானாலும் திரித்துப் புறப்படலாம். திரித்துக் கூறுவதென்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்," என்று அமைச்சர் தெரிவித்தார். அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் பேசிச் செய்திகள் திரித்து வெளியிடப்படுவதாகவும் அவர் கூறினார்.
அந்தக் குறிப்பிட்ட திருக்கோயிலில் தரிசனம் நடந்த தினத்தன்று, கோயில் கதவுகள் மாலை 6 மணிக்குத்தான் திறந்தன. மக்கள் முன்கூட்டியே வரிசைகளில் நின்று கொண்டிருந்தார்கள்.பக்தர்கள் அதிக நேரம் நின்று கொண்டிருக்கின்றோம் என்று கூறியபோது, தான் அறைகள் சென்று பார்த்ததில் அன்றைய தினம் மட்டும் கிட்டத்தட்ட 50,000 மக்கள் தரிசனம் செய்திருக்கிறார்கள் என்று கூறினார்.
இதையும் படிங்க: அரசுப் பள்ளி அருகே மதுபானக் கூடத்திற்கு எதிர்ப்பு: போலீஸ் அதிகாரியின் கையைக் கடித்த தவெக தொண்டர் கைது!
"ஆகவே சற்றுப் பொறுமையாகத்தான் செல்ல வேண்டும். உங்களுக்கு வேறு ஏதாவது வகைகள் உதவி தேவைப்பட்டால் - இயற்கை உபாதை, மருந்து மாத்திரை போன்ற பசியோ மயக்கமோ மிகவும் முடியவில்லை என்றால் - உடன் வாருங்கள். நான் கூட அழைக்கச் சொல்கின்றேன் என்று கூறினேன்," என்று அவர் நடந்ததைக் குறிப்பிட்டார். வி.ஐ.பி. தரிசனம்: திருக்கோயில்களைப் பொறுத்தவரையில், வி.ஐ.பி. தரிசனம் என்பது அவர்களுடைய பணி நிமித்தத்தையும் அவர்களின் தேவைகளையும் ஏற்றச் சூழல் அமைகிறது.
இதனை முழுமையாக ஊடகங்கள்தான் நெகட்டிவ்வாக இல்லாமல், அந்த விஷயங்களைப் பற்றிப் பேசும்பொழுது, பாசிட்டிவ் ஆகவும் பேச வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். நிச்சயமாக நாங்கள் விரட்டப்பட மாட்டோம், கோபப்பட மாட்டோம். குறைகளை நிறைகளாக்கப் பணிகளை நாங்கள் மேற்கொள்வோம், என்று அவர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: "பாஜகவில் குடியேறியவர் தானாகவே வெளியேறுவார்" - நயினார் நாகேந்திரனை விமர்சித்த ஆர்.எஸ். பாரதி!