தமிழ்நாட்டின் அரசியல், சமூக மற்றும் கலாச்சார வரலாறு, எப்போதும் ஒற்றுமையின் அடிப்படையில் நிலைத்து நிற்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது பல்வேறு உரைகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் மூலம், தமிழ்நாட்டின் உள் ஒற்றுமையையும், மாநில சுயாட்சியைப் பாதுகாக்கும் தேசிய ஒற்றுமையையும் வலியுறுத்தி வருகிறார்.
குறிப்பாக, 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆற்றிய மாநில சுயாட்சி தீர்மான உரையில், அவர் வேற்றுமையில் ஒற்றுமை எனும் கருத்தை மையமாக வைத்து, மத்திய அரசின் தலையீடுகளுக்கு எதிராக மாநிலங்களின் ஒற்றுமையை வலியுறுத்தினார். இந்த உரை, தமிழ்நாட்டின் அரசியல் பயணத்தில் ஒரு மைல்கல்லாகத் திகழ்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தை துவக்கினார்.

இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக தமிழ்நாட்டு மக்களை ஒரு குடையின் கீழ் ஒன்றிணைக்கும் முயற்சியாக கூறப்படுகிறது. இதனிடையே, என்னை வகுத்தால் என் தம்பிகள் என் தம்பிகளைக் கூட்டினால் நான் என பேரறிஞர் அண்ணா கூறியதாக முதலமைச்ச ஸ்டாலின் கூறினார்.
இதையும் படிங்க: நீங்க தான் மூடிக்கணும் ஸ்டாலின்! அந்த அவசியம் எங்க அண்ணனுக்கு இல்ல... கொந்தளிக்கும் அதிமுக
புரட்சியாகத் தமிழ் மண்ணில் திராவிட முன்னேற்றக் கழகம் வேர்விட்ட இந்த 76 ஆண்டுகளில் தி.மு.க.வை வகுத்தால் தமிழ்நாடு., தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் தி.மு.க என்று கூறும் அளவிற்கு வளர்ந்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். ஓரணியில் தமிழ்நாடு எனத் தலைநிமிர்ந்து நின்று பகையை வெல்வோம் என்றும் தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.
இதையும் படிங்க: இனப் பகையை சுட்டெரிக்கும் நெருப்பு... தந்தை பெரியாருக்கு மகுடம் சூட்டிய முதல்வர்