வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

முதன் முறையாக இணைய வழி கிராம சபை கூட்டம்… முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…!

கிராமசபை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

கிராம மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வதற்காக தமிழகத்தில் 12,480 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் தொடங்கியது. கிராமசபை கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாடினார். பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், கிராமங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அதில் அலட்சியம் கூடாது எனவும் கூறினார். பிளாஸ்டிக் பயன்பாட்டை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சாலைகள், தெருக்களில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் என்றும் சாதிப் பெயர்களை நீக்கி பூக்களின் பெயர்களை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தண்ணீரை பண போல் பார்த்து செலவழிக்க வேண்டும் என்றும் மழைநீர் சேகரிப்பு அவசியம் எனவும் வலியுறுத்தினார். மூன்றாவது முறையாக கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று இருப்பதாகவும், முதல்முறையாக இணையவழியில் கிராம சபை கூட்டம் நடைபெற்று உள்ளதாகவும் தெரிவித்தார். நாட்டின் முதுகெலும்பாக கிராமங்கள் உள்ளதாக கூறிய அவர், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம நிர்வாகத்தில் நிதி மேலாண்மை அவசியம் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நச்சுன்னு 4 பாயிண்ட்… திமுக ஜோலியை முடித்த அண்ணாமலை… ஆட்டம் காணும் அறிவாலயம்…!

இதனிடையே, தண்ணீர் பிரச்சினை, தெரு விளக்குகள் தேவை, சாலை வசதி, பேருந்து சேவை என பல்வேறு தேவைகள் குறித்து கிராமசபை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக சாதிப் பெயர் கண்டிப்பாக மாற்றம் செய்ய வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்தும் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காசா மக்களுக்காக கண்ணீர்… எல்லாத்துக்கும் பதவி சுகம் தான் காரணம்! விளாசிய சீமான்…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी