சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாமக நிறுவனர் ராமதாஸ் சுசீலாவோடு மாலையுடன் இருக்கும் போட்டோ மார்பிங் செய்து சதிதிட்டம் என பேட்டியளித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாமக நிறுவனர் ராமதாஸ் சுசிலாவுடன் மாலையோடு அமர்ந்திருந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வை.காவேரி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பாமக நிறுவனர் ராமதாஸ் அவருடைய பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் ஜி.கே.மணி, சுசிலா, சேலம் எம்எல்ஏ அருள் ஆகிய மூவரும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி உள்ளதாகவும் மருத்துவர் ராமதாஸ் இதுவரை எந்த ஒரு இடத்திலும் சுசிலா தனது இரண்டாவது மனைவி என்று கூறியதே கிடையாது என்றும் வன்னியர் சமுதாயத்தில் இது போன்ற இரண்டாவது மனைவி என்பதை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒரே பாமக தான்... அன்புமணியே தலைவர்! திலகபாமா பரபரப்பு பேட்டி
வேணுமென்றே இந்த மூன்று பேரும் சேர்ந்து மருத்துவர் ராமதாஸிற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருவதாகவும் இதை வன்மையாக கண்டிப்பதாகவும் தொடர்ந்து ஐயா ராமதாஸிற்கு சேலம் அருள் சிட்டுக்குருவி லேகியம் வாங்கி தருவதாகவும் அது போன்ற லேகியம் சாப்பிட்டால் ஐயாவின் உடல் தாங்காது என்றும் அவரது உயிருக்கு ஆபத்து என்றால் இந்த 3 பேர் தான் காரணம் என்றும் குற்றம் சாட்டியவர் அதிமுகவில் இருந்து கொண்டு எதற்கு பாமக பற்றி பேசுகிறீர்கள் என பாமக நிர்வாகிகள் கேள்வி கேட்கிறார்கள் என்று கேட்டதற்கு தான் பாமகவை பற்றி பேசுவதற்கு காரணம் வன்னியர் சமுதாயத்திற்கு ஒரு மாபெரும் தலைவர் ராமதாஸ் என்பதாலும் வன்னியர் சமுதாயத்தை சார்ந்தவர் என்பதாலும் இந்த கருத்து தெரிவிப்பதாகவும் பேட்டி அளித்தார்.
இதையும் படிங்க: அன்புமணியே தலைவர்! ஒரே குஷி தான்... பாமக அலுவலகத்தில் கொண்டாட்டம்