தேசிய கல்விக் கொள்கை 2020-ன் படி பொதுத் தேர்வில் 30 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண் எடுத்தால் 3,5,8 ஆம் வகுப்புகளில் ஃபெயில் என்ற நடைமுறை சிபிஎஸ்இ பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 8 ஆம் வகுப்பு வரை இருந்த கட்டாய தேர்ச்சி முறை மாற்றப்பட்டு, தற்போது இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி 8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி இருந்த நிலையில், இந்த ஆண்டு மே 1ஆம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

ஆனால் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும், ஏப்ரல் மாதம் முடிவதற்கு முன்பே 9 ஆம் வகுப்பு வரை விடைத்தாள் திருத்தப்பட்டு, மாணவர்கள் பழைய விதிமுறையின் படி அடுத்த வகுப்புக்கு சென்று விட்டனர். இந்த நடைமுறை நேற்றில் இருந்து மட்டுமே அமலுக்கு வந்துள்ளதால், அடுத்த ஆண்டு மட்டுமே இது முழுமையாக செயல்பாட்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான சுற்றறிக்கை அனைத்துப் பள்ளிகளுக்கும் மார்ச் 18 ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முகலாயர்கள் ‘அவுட்’... மகா கும்பமேளா ‘இன்’ - சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் அதிரடி மாற்றம்!

இந்த நடைமுறை குழந்தைகளின் கல்விக் கனவை தகர்க்கும் நடவடிக்கை என்றும், தேர்வு என்றாலே என்ன தெரியாத மாணவர்களுக்கு இதுபோன்ற அழுத்தங்களைக் கொடுக்கக் கூடாது என்று தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த புதிய நடைமுறை மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கல்வியில் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் சிபிஎஸ்இ தேர்வு முறையில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் ஃபெயில் செய்ய யார் சொன்னது. அப்படி ஒன்றும் எதுவும் இல்லை என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பரபரப்பை கிளப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சிபிஎஸ்இ தேர்வு முறையில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் ஃபெயில் செய்ய யார் சொன்னது. அப்படி ஒன்றும் எதுவும் இல்லை. மத்திய அரசு எது சொன்னாலும் மாநில அரசு அதற்கு எதிர்ப்பாகத்தான் எதையாவது சொல்லும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 100 நாள் வேலை செய்வோருக்கு ஹேப்பி நியூஸ்.. தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவித்த மத்திய அரசு..!