தமிழக பாஜக அமைப்பில் பெரிய மாற்றம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் பல்வேறு பிரிவுகளுக்கு புதிய மாவட்ட அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக மாநிலத் தலைமையகம் அறிவித்துள்ளது. மறைந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்களின் ஒப்புதலுடன், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தலைமையிலான நிர்வாக குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளராக குமரகுரு நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில்துறை வல்லுநர்கள் பிரிவு அமைப்பாளராக சுந்தர் ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவப் பிரிவு அமைப்பாளராக பிரேம் குமாரும், தொழிற்பிரிவு அமைப்பாளராக பாலகிருஷ்ணன் என்பவரும், கூட்டுறவு பிரிவு அமைப்பாளராக மகா சுசீந்திரனும், முன்னாள் படை வீரர்கள் பிரிவு அமைப்பாளராக கர்னல் ராமனும், கலை மற்றும் கலாச்சார பிரிவு அமைப்பாளராக பெப்சி சிவகுமாரும், நெசவாளர் பிரிவு அமைப்பாளராக அண்ணாதுரை மற்றும் செல்வராஜ் என்பவரும், கல்வியாளர் பிரிவு அமைப்பாளராக நந்தகுமாரும், மீனவர் பிரிவு அமைப்பாளராக சீமா என்பவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பிரதமரின் தீபாவளி பரிசு! GST சீர்திருத்தத்தை புகழ்ந்து தள்ளிய நயினார் நாகேந்திரன்
இதேபோல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு அமைப்பாளராக கோபிநாத் என்பவரும், அரசு தொடர்பு மற்றும் மத்திய நலத்திட்டங்கள் பிரிவு அமைப்பாளராக சூரிய நாராயணன் என்பவரும், தேசிய மொழிகள் பிரிவு அமைப்பாளராக ஜெயக்குமார் மற்றும், விருந்தோம்பல் பிரிவு அமைப்பாளராக கந்தவேல் மற்றும் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆன்மீக மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு அமைப்பாளராக தாமோதர் (ஷெல்வி) நியமனம் செய்யப்ப்பட்டுள்ளார்.
உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு அமைப்பாளராக பாஸ்கரன் மற்றும் வசந்தராஜன், பிரிச்சாரப்பிரிவு அமைப்பாளராக பாண்டியராஜ், தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவு அமைப்பாளராக அன்பழகன், தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவு அமைப்பாளராக அர்ஜுன மூர்த்தி மற்றும் சங்கீதா ரங்கராஜன், அயலக தமிழர் பிரிவு அமைப்பாளராக சுந்தரம், அமைப்புசாரா தொழிற்பிரிவு அமைப்பாளராக ராதாகிருஷ்ணன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பிரிவு அமைப்பாளராக மாரியப்பன், வர்த்தகர் பிரிவு அமைப்பாளராக சதீஷ்ராஜா, பொருளாதார பிரிவு அமைப்பாளராக காயத்ரி சுரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: இதுதான் காங்கிரஸ் கட்சி மாண்பா? ஒழுங்கா பிரதமர் கிட்ட மன்னிப்பு கேளுங்க... நயினார் வலியுறுத்தல்