பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் இழந்துவிட்டதாக நாஞ்சில் சம்பத் விமர்சித்தார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது நடிகர் விஜய்யை விமர்சிக்கும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.
விஜய் சேலத்தில் நடத்திய கூட்டத்தில் அரசியல் கட்சிகள் குறித்து பேசியதற்கு பதிலடியாக, நயினார் நாகேந்திரன் பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷா கிட்ட இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடக்க முடியும் என்று கூறினார். இந்த கருத்து நடிகை திரிஷாவின் பெயரை தனிப்பட்ட வாழ்க்கை சூழலுடன் இணைத்து, அவதூறாகவும் அநாகரிகமாகவும் பார்க்கப்பட்டது. நைனார் நாகேந்திரன் கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் கிளைச் செயலாளர் கூட நயனார் நாகேந்திரனை விட கண்ணியத்துடன் பேசுவார் என்று நாஞ்சில் சம்பத் திருப்பித்துள்ளார். அடிப்படை அறிவைக் கூட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இழந்துவிட்டதாக விமர்சித்தார். நான்கு கோடி ரூபாய் சிக்கலில் சிக்கி தவிக்கும் ஒரு நபர் அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவதா என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: எல்லாத்துக்கும் LIMIT இருக்கு BRO...! காதலர்கள் எல்லை மீறினால் அவ்ளோ தான்... போலீஸ் எச்சரிக்கை...!
கட்டைப் பையில் கட்டு கட்டாக பணம் தூக்கி திரிந்த நாகம் ஊருக்கு உபதேசம் செய்வதால் என்ற கடுமையாக சாடினார். முதலில் உங்கள் முதுகில் படிந்துள்ள கறைகளை கங்கை நீரால் கழுவுங்கள் என்றும் தமிழகப் பெண்கள் திருப்பி தர போகும் பதிலடிகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிருப்தி...! தகுதி சான்று புதுப்பிக்கும் கட்டண உயர்வு..! லாரிகள் ஸ்ட்ரைக்...!