தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை இடங்களை பெற்ற கட்சியாக நடிகர் விஜய் தலைமையாக கொண்ட தமிழக வெற்றி கழகம் உள்ளது.
அவர்கள் ஆட்சி அமைப்பதற்கு இன்னும் தமிழக வெற்றி கழகத்தை அழைக்காத கவர்னரை கண்டித்தும் பாஜகவை கண்டித்து நெல்லை ஜங்ஷன் ரயில் நிலைய முன்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இன்று காலை இதற்காக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ராமேஸ்வரன் தலைமையில் ஏற்பாடுகள் நடைபெற்று நெல்லை எம்பி ராபர்ட் ப்ரூஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று இருந்தனர். ஆர்ப்பாட்டமும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இதையும் படிங்க: போராட்டம் பண்ணுவீங்களா.? மயிலாடுதுறையில் காங்கிரசார் மீது திமுகவினர் தாக்குதல்..!
இந்த நிலையில் முன்னாள் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் இதே கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை வண்ணாரப்பேட்டை அருகே தனது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
ஏற்கனவே நெல்லை ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில் முன்னாள் மாவட்ட தலைவர் தனது ஆதரவாளர்களுடன் மற்றொரு இடத்தில் விஜய்க்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் நெல்லையில் பேசும் பொதுவாக மாறியிருக்கிறது.
அதற்கு முன்னதாக முன்னாள் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் பதவியில் இருந்து இறக்கப்பட்டது அவரது ஆதரவாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியினர் நெல்லையில் கோஷ்டியாக பிரிந்து இருக்கிறது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
தற்பொழுது நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் கோஷ்டி கோஷ்டியாக ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: பழக்க தோஷம் பாஸ்...!! - “தளபதி ஸ்டாலின்” - விஜயை மறந்த காங்கிரஸ் கட்சியினரால் பரபரப்பு...!