புரட்சி தமிழகம் கட்சி மற்றும் பறையர் பேரவை தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி கடந்த செப்டம்பர் மாதம் சென்னை டி.ஜி.பி. அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை தாக்கிய புகாரில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏர்போர்ட் மூர்த்தியை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறையில் சந்தித்து பேசினார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சிறை அதிகாரிகள் அவரை நடத்தும் முறைகள் குறித்தும் அவரது உடல்நலம் குறித்தும் சீமான் கேட்டு கேட்டறிந்தார்.
தொடர்ந்து சிறை வாயிலில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், ஏர்போர்ட் மூர்த்தி நிகழ்வை பார்த்த அனைவருக்கும் அங்கே என்ன நடந்தது என தெரியும் என்றும், தாக்குவதற்காக வந்து சுற்றி வளைத்த போது வழி இல்லாமல் தன்னை தற்காத்துக் கொள்ள ஏர்போர்ட் மூர்த்தி சண்டையிட்டதாகவும், இந்த விவகாரத்தை இவ்வளவு பெரிதாக்குவார்கள் என யாரும் எண்ணிப் பார்க்கவில்லை எனவும், இந்தியாவின் எடுத்திருப்போம் என்றும், அவசர அவசரமாக அவரை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைந்துள்ளதாக தெரிவித்தார்.
முகநூலில் பதிவிடுவது பேசுவது அரசுக்கு எதிராக கருத்து பதிவிடுவது என்றாலே குண்டர் சட்டத்தில் அடைக்கிறார்கள் என்றும், கொலை குற்றவாளிகள் கூட 30 நாட்களிலேயே திரையில் இருந்து வெளியே வந்து விடுவதாகவும், தங்களை எதிர்த்துப் பேசுவோர் சிறையில் அடைக்க வேண்டும் என எண்ணையில் கொடுமைப்படுத்துவதாக தெரிவித்தார். பொய்யாக பழிவாங்குவதற்காக புனையப்பட்ட வழக்குகள் என தெரிந்தும் நீதிபதிகள் அறிவுறுத்தல் குழு எதற்கு என்று சீமான் கேள்வி எழுப்பினார். திட்டமிட்டு குரல்வலையை நெரிப்பதற்கு செயல்பாடுகளை முடக்குவதற்காகவும் அரசியல் திட்டமிட்ட பழிவாங்கல் என தெரிவித்தார். வாராகி வலைவலி பக்கத்தை திறக்க திட்டமிட்டபோது அதிகாலை நேரத்தில் அவரையும் கைது செய்து பழிவாங்குகிறார்கள் என குற்றம் சாட்டினார். அனைவரும் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடந்தால், திமுக ஆட்சியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் சட்டத்தை மீறி, சட்டத்தின் எல்லையைத் தாண்டி அரசு கூறுவதை மட்டுமே செய்கிறது என சாடினார். தமிழ்நாட்டில் போதை கலாச்சாரத்தை உருவாக்கி விட்டு, இளைஞர்களை சிறையில் அடைத்து அவர்களது எதிர்காலத்தை அரசு பாழாக்குவதாக குற்றம் சாட்டினார். நல்ல நாட்டை உருவாக்கும் சிற்பிகளின் செயல் இதுதானா என வினவினார்.
இதையும் படிங்க: 2026 சட்டமன்ற தேர்தல்: பிப்.21ம் தேதி முக்கிய அறிவிப்பு!! அதிரடியாக களமிறங்கிய சீமான்..!!
விஜய் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது பற்றிய கேள்விக்கு, தவெக தலைவர் விஜய், ரங்கசாமி ஆகியோருக்கு முன்பாகவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரியது நான் தான் என சீமான் தெரிவித்தார். தான் முன்வைத்த கோரிக்கையை தற்போது விஜய் பேசி அந்த கோரிக்கை வலுப்பெறுவது தனக்கு மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார். விஜயின் மாநாடு குறித்த கேள்விக்கு, 2 நாட்களுக்கு முன் சாதிவாரி கணக்கெடுப்பு, சமூக நீதி, பஞ்சமி நிலம் மீட்பு என பல்வேறு கோரிக்கைகளுக்காக உளுந்தூர்பேட்டையில் தான் நடத்திய மாநாடு குறித்த எந்த கட்சி தலைவரிடம் நீங்கள் கேள்வி எழுப்பினார்கள் என செய்தியாளரிடம் காட்டம் தெரிவித்த சீமான், கிளி ஜோசியம் சீட்டு எடுப்பது போல கேட்கிறீர்களா என்றும் நான் என்ன பேசுகிறேனோ அதை பற்றி மட்டும் கேளுங்கள் என கூறினார். முன்னதாக ஏர்போர்ட் மூர்த்தியை சந்திப்பதற்காக வந்த சீமான் 10 நிமிடத்திற்கும் மேலாக சிறை வாசலில் காரிலேயே அமர்ந்திருந்து பின்னர் சிறைக்குள் சென்றார்.
இதையும் படிங்க: சீமான் மீதான அவதூறு வழக்கு ரத்து... DIG வருண் குமார் தொடர்ந்த வழக்கில் அதிரடி காட்டிய மதுரை கோர்ட்...!