தொகுதி மறு வரையறை மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொகுதி மறுவறையறை மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்ப்புகளை மீறி இரண்டு மசோதாக்களை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவைகள் தாக்கல் செய்தார். அரசியலமைப்பு சட்டம் 131 வது திருத்தம் மசோதா, தொகுதி மறு வரையறை மசோதா ஆகியவற்றை தாக்கல் செய்துள்ளார்.
தொடர்ந்து யூனியன் பிரதேச சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்துள்ளார். மசோதாக்கள் மீதான விவாதத்தில், தொகுதி மறு வரையறை மசோதாவை ஏற்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று திமுக எம்.பி. டி.ஆர். பாலு பேசினார். தொகுதி மறு வரையறை மகளிர் இட ஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டம் திருத்த மசோதா என்று சாண்ட்விச் போல் இணைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

வேண்டுமென்றே குழப்புவதற்காக மத்திய அரசு திட்டமிட்டு மூன்று மசோதாகளை இணைத்து தாக்கல் செய்திருப்பதாக டி.ஆர் பாலு தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏற்றியதை குறிப்பிட்டு பேசினார்.
இதையும் படிங்க: 32 திருத்தங்களுடன்..!! 2026-27 நிதிநிலை அறிக்கை மக்களவையில் நிறைவேற்றம்..!!
தொகுதி மறு வரையறையை எதிர்த்து திருச்சியில் இன்று தமிழக முதல்வர் கருப்புக்கொடி ஏந்தி போராடியதாக மக்களவையில் டி.ஆர். பாலு தெரிவித்த நிலையில், அப்போது உங்கள் தலைவர் கருப்புக்கொடி ஏற்றினால் என்ன.? நீலக் கொடி ஏற்றினால் என்ன.? என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கிண்டல் அடித்தார். உங்கள் தலைவர் கருப்புக்கொடி ஏற்றியதை எதற்காக மக்களவையில் கூறுகிறீர்கள் என்றும் ஓம் பிர்லா கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதையும் படிங்க: இனிமே இந்த இபிஎஸ் வேற மாதிரி இருப்பேன்..! பரப்புரையில் எடப்பாடி எச்சரிக்கை..!