தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின், 2025-ஆம் ஆண்டில் கட்சியின் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைகள், 2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராவதற்கும், கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களிடையே திமுகவின் செல்வாக்கை மேலும் விரிவாக்குவதற்கும் முக்கியமானவையாக அமைந்துள்ளன.
கட்சியின் அடிமட்ட அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்கும், கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவதற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இவை ஒரு பக்கம் இருக்க பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக பல பிளவுகளை சந்தித்து வருகிறது.

அதிமுகவின் முக்கிய தலைகள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து தனித்து செயல்பட்டு வருகின்றனர். கட்சிக்குள் ஒற்றுமையே இல்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் எதிர்க்கட்சி பலம் இழந்து போய் வருகிறது என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலை பாஜகவுடன் இணைந்து அதிமுக சந்திக்க உள்ளது.
இதையும் படிங்க: WAIT & SEE... அமைதி வெற்றிக்கான அறிகுறி... சூசகமாக பேசிய செங்கோட்டையன்...!
இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என மக்கள் பேசிக் கொள்வதாக தெரிவித்தார். இந்த கருத்தை தான் சொல்லவில்லை என்றும் பொதுமக்கள் தான் பேசிக் கொண்டிருப்பதாகவும் தன் மீது பழி போட்டு விடாதீர்கள் எனவும் தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடக்கும் சூழலில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுவதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: பரபரக்கும் அரசியல் களம்… சத்தமின்றி சம்பவம் செய்த இபிஎஸ்…!