போன ரெண்டு வாரம் கெடு விதிக்கின்ற வாரம் என்றால் இந்த வாரம் பதவி நீக்கம் செய்கின்ற வாரம் என சொல்லலாம். கடந்த வாரம் பாமகவில் இருந்து அன்புமணிக்கும், அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கும் கெடு விதிக்கப்பட்டது. ஆனால் கெடுவை சட்டை செய்யாத எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பதவிகளை பறித்தார். மற்றொரு பக்கம் மகன் என்றும் பாராமல் அன்புமணியை அடிப்படை உறுப்பினர் என அனைத்து பதவிகளை உருவி விட்டார் ராமதாஸ். இப்படி தமிழக அரசியல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
பாமகவில் அப்பா - மகன் சண்டை விரைவில் முடிவுக்கு வந்துவிடும், இருவரும் ராசி ஆகிவிடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், ராமதாஸ் டீம், அன்புமணி டீம் என பாமக இரண்டாக பிரிந்தே விட்டது. வழக்கம் போல வியாழக்கிழமையான நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். இரும்பு மனிதர் என்னையே உருக்கிவிட்டார் என்றெல்லாம் உருக்கமாக பேசினார். கடைசியாக அன்புமணியை கட்சியை விட்டு நீக்குவதாகவும், வேண்டுமென்றால் தனியாக கட்சி ஆரம்பித்துக் கொள்ளட்டும் என்றும் சொல்லிவிட்டார்.
இதற்கெல்லாம் பின்னணியில் அன்புமணியின் சகோதரி ஸ்ரீ காந்திமதி இருப்பதாக கூறப்படுகிறது. 50வது திருமண நாள் கொண்டாட போட்டோவை அன்புமணி டீம் தான் திட்டமிட்டு வெளியிட்டதாகவும், அதனால் தனது இமேஜ் அதிகமாக டேமேஜ் ஆகிவிட்டதாகவும் ராமதாஸ் கடுப்பில் இருக்கிறாராம். அதனால் தான் தனது பவரை பாமகவில் காட்டுவதற்காக யாராக இருந்தாலும் கட்சியை விட்டு தூக்குவேன், யாரை வேண்டுமானாலும் கட்சிக்குள் கொண்டு வருவேன் என காட்ட ஆரம்பித்துள்ளராம்.
இதையும் படிங்க: இதுக்கு இல்லையா சார் END? ராமதாஸ் - அன்புமணி தரப்பினரிடையே கடும் வாக்குவாதம்...
மகனுக்கு போட்டியாக மகளை களமிறக்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளாராம். அதனால் தான் ஏற்கனவே பூம்புகாரில் நடந்த மகளிர் மாநாட்டில் காந்திமதியை மேடையில் ஏற்றி முதல் தீர்மானத்தை வாசிக்க வைத்துள்ளார். சமீபத்தில் பாமக சார்பில் ராமதாஸ் நடத்திய கூட்டங்களிலும் காந்திமதி தலை காட்டியுள்ளார். அதுமட்டுமின்றி எல்லா இடங்களிலும் அக்கா என்ன சொல்லுறாங்களோ அதை கேட்கணும் அப்படின்னு நிர்வாகிகளுக்கு ஸ்பெஷல் உத்தரவு வேற போடப்பட்டுள்ளதாம். அதிகாரப்பூர்வமாக செயல் தலைவர் பதவியைத் தான் தூக்கி காந்திமதி கையில் கொடுக்கவில்லையாம் ராமதாஸ், அதுவும் விரைவில் நடந்து விடும் என பாமக வட்டாரத்தில் கசியும் தகவல்கள் கூறுகின்றன. தற்போது பாமகவில் அக்கா அரசியல் மேலோங்கி வருவதும், ராமதாஸ் மகளை முன்னிலைப்படுத்தி அரசியலை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING: முடியாத சண்டை! பாமக தலைவர் அன்புமணி தான்… வழக்கறிஞர் பாலு திட்டவட்டம்..!