வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு ›

#BREAKING காலையிலேயே அதிபயங்கரம்… இளம் பெண்ணை வெட்டி சரித்த போலீஸ் ஏட்டு கைது… பகீர் பின்னணி…!

பெண்ணை வெட்டிக் கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சகோதரியின் நகைகளை திருப்பி கேட்டதால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர் முத்துக்குமார் என்பவர் பிரியா என்ற பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு

தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தலை சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணியன். இவருடைய  மனைவி பிரியா (39). இவர் அந்த பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்தார். இவரது சகோதரி முத்துலட்சுமி என்பவருடன், தட்டார்மடத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் முத்துக்குமார் (36) என்பவர் பழகி வந்தாராம். இதனால் முத்துலட்சுமியின் நகைகளை வாங்கி முத்துக்குமார் அடமானம் வைத்ததாக கூறப்படுகிறது. இதனை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தாராம்.

இதைத் தொடர்ந்து பிரியா, இன்று முத்துக்குமாரிடம் சென்று நகைகளை திருப்பி கொடுக்குமாறு வலியுறுத்தி உள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் அரிவாளால் பிரியாவை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த பிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையும் படிங்க: தலை எங்கே?… பிரியாணி அண்டாவில் பெண் வேகவைக்கப்பட்ட கொடூரம்… இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்…!

இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுக்கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

போலீஸ்காரர், பெண்ணை வெட்டிக் கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: நள்ளிரவில் பயங்கரம்… தூத்துக்குடியில் பிரபல ரவுடி ‘துப்பாக்கி செல்வம்’ வெட்டிக்கொலை…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी