காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன் பா.ஜ.க.வுக்கு ஒத்து ஊதுவதாக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கும் சட்ட முன்வடிவினை மு.க.ஸ்டாலின் தலைமையிலான கழக ஆட்சியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், சி.பி.ஐ., சி.பி.எம்., அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட பாஜக அல்லாத அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அச்சட்டம் ஆளுநர் வழியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு, அச்சட்டமுன் வடிவுக்கு அனுமதி வழங்கப்படாத நிலை இருப்பதாக கூறினார்.
புதியதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் உயர்கல்வித் துறை அமைச்சரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான விஸ்வநாதன் “ஆளுனரே பல்கலைக் கழக வேந்தராக நீடிக்கலாம்” என்று கருத்து தெரிவித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என்றார்.

மேலும் இது மாநில உரிமைகளுக்கு எதிரானது என்றும் மத்திய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட ஆளுனரே பல்கலைக் கழக வேந்தராக தொடரலாம்‘ என்று பா.ஜ.க.வுக்கு ஒத்து ஊதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதனின் கருத்து பாஜக அரசின் அடிவருடியாக காங்கிரஸ் மாறிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது என்றார்.
இதையும் படிங்க: தெருவில் கையேந்திய திருநங்கைகள் இன்று... மிஸ் திருநங்கை நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேச்சு...!
இச்சட்டம் நிறைவேறுவதற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரே இன்றைக்கு அதற்கு எதிராக பேசுவது என்பது பதவி சுகத்துக்காக காங்கிரஸ் கட்சி தனது கொள்கையை மாற்றிக் கொண்டதாக தெரிகிறது என்றும் இதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டிப்பதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு பழைய முட்டையா..? அலட்சியம் காட்டாதீர்கள்..! அண்ணாமலை அட்டாக்..!!