விழுப்புரத்தையே தனது கண்ட்ரோலில் வைத்திருப்பவர் என்ற பொன்முடியின் சாம்ராஜ்யம் மெல்ல, மெல்ல வீழ தொடங்கியிருக்கிறது. முதலில் உயர் கல்வித்துறை, மாவட்ட பொறுப்பு, அடுத்து திமுக துணை பொதுச்செயலாளர் பதவி, இறுதியாக அமைச்சர் பதவி என பொன்முடியின் சாம்ராஜ்யம் சரியத் தொடங்கியது. தற்போது இறுதியாக விழுப்புரத்தின் ராஜாவாக வலம் வந்த பொன்முடியை திமுக தலைமை டம்மியாக்கிவிட்டதாக தெரிகிறது.

தனக்குப் பின் தனது மகன் தான் விழுப்புரத்தின் ராஜா என எண்ணி வந்த நிலையில், விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளரான லட்சுமணன் தலைமையின் குட் புக்கில் இடம் பெற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. பொன்முடியின் சர்ச்சை கருத்துகளால் திமுகவில் இருந்து அவர் ஓரங்கட்டப்பட்டு தேர்தல் மண்டல பொறுப்பாளர் பதவியும் எ.வா.வேலு கைக்கு மாறிவிட்டது.

வர உள்ள 2026ம் தேர்தலுக்கான பணிகளில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துவது, மாவட்ட வாரியாக கூட்டங்களை நடத்தி குறைகளைக் கேட்பது என அடுத்தடுத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அந்த வகையில் தேர்தலுக்காக மண்டல அளவிலான பொறுப்பாளர்களை நியமிக்க மு.க.ஸ்டாலின் லிஸ்ட் தயார் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா ஆகியோரின் பெயர்கள் இடம் பிடித்துள்ளன.

இதையும் படிங்க: இதில் என்ன பெருமை வேண்டிக்கிடக்கு? எடப்பாடியை கடுமையாக விளாசிய கனிமொழி!!
மண்டல அளவில் கட்சியை பலமாக வைத்திருப்பது முக்கியம் என்பதால், கட்சியில் ஆக்டீவாக இருப்பவர்கள், கட்சி நிர்வாகிகளுடன் இணக்கமாக இருப்பவர்கள் என பார்த்து பார்த்து பட்டியல் தயாராகியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் பதவி காலியானதால் விழுப்புரம் மண்டல தேர்தல் பொறுபாளராக பொன்முடிக்கு பதிலாக எ.வ.வேலும் நியமிக்கப்படவுள்ளார். அதுமட்டுமின்றி பொன்முடிக்கு எந்தவொரு தேர்தல் பொறுப்பும் கொடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தயாராக இல்லையாம்.

பொன்முடியை ஓரங்கட்டும் அதே நேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எம்.பி. கனிமொழியை மாநில அரசியலில் களமிறக்கவுள்ளார். தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் தமிழக தேர்தல் பொறுப்பாளராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை எம்.பி.யாக மத்திய அரசியலில் செயல்பட்டு வந்த கனிமொழி, இனி மாநில அரசியலிலும் முழு கவனத்துடன் களமிறங்கவுள்ளார்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளை அதிமுக காப்பாற்றியது..! கனிமொழி எம்.பி பகிரங்க குற்றச்சாட்டு..!