விருதுநகர்: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கட்சி நிர்வாகிகளிடம் பேசும்போது தமிழக அரசியல் சூழல் குறித்து முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
“வெளிநாடுகளில் இன்ஸ்டாகிராம் மூலம் மக்களின் மனநிலையை மாற்றி ஓட்டுகளைப் பெற முடியும் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதே நிலைமை தற்போது தமிழகத்திலும் நடந்துள்ளது” என்று அவர் கூறினார்.
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை யாரும் எதிர்பார்க்கவில்லை என்று சொன்ன ராஜேந்திர பாலாஜி, “தமிழ்நாட்டில் ஏற்பட்ட அரசியல் சுனாமியில் சிக்கி வெற்றி வாய்ப்பை இழந்தவர்களில் நானும் ஒருவன். விஜய் பெற்ற வாக்குகள் அனைத்தும் அதிமுகவின் ஓட்டுகளே. திமுகவின் ஓட்டுகள் அப்படியே திமுகவுக்குச் சென்றன” என்றார்.
இதையும் படிங்க: என்னது..!! எலக்ஷன்ல சொந்த கட்சிக்காரங்களே காலை வாரிட்டங்களா..!! வெளியான ஷாக் தகவல்..!! பரிதாபத்தில் திமுக, அதிமுக..!!

எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றது காலம் தந்த கொடை என்று புகழ்ந்த அவர், “கட்சியில் உள்ள விரிசல்களை தலைமை பார்த்துக் கொள்ளும். ஈபிஎஸ் முதலமைச்சராக வர வேண்டும் என 1 கோடியே 30 லட்சம் மக்கள் வாக்களித்துள்ளனர். அதிமுகவை மக்கள் எளிதில் கைவிட மாட்டார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், “அதிகாரத்திலேயே இருந்தால்தான் கட்சியை நடத்த முடியும் என்ற நிலை அதிமுகவுக்கு இல்லை. மக்கள் ஆதரவுடன் கட்சியை வலுப்படுத்தி முன்னேறுவோம்” என்றும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
அதிமுகவின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை தெரிவித்த அவர், கட்சி நிர்வாகிகளிடம் ஒற்றுமையுடன் செயல்படுமாறு வலியுறுத்தினார். தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆழமாக ஆராய்ந்து, அடுத்த கட்ட உத்திகளை வகுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தப் பேச்சு அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தலைமையிலான த.வெ.க. அரசுக்கு எதிராக அதிமுக தனது அடுத்தக் கட்ட நகர்வுகளைத் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விரைவில் “அம்மா ” நியூஸ் சேனல்!! கட்சியை மீட்க எடப்பாடி பழனிசாமி புது திட்டம்!