பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து மோதலானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திண்டிவனம் அருகேயுள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தைலாபுரம் இல்லத்தில் அவருடைய இருக்கைக்கு அருகே ஒட்டுகேட்பு கருவி வைக்கப்பட்டு இருந்ததாக மருத்துவர் ராமதாஸ் கடந்த 11ஆம் தேதி விருதாசலத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
சென்னையை சேர்ந்த தனியார் துப்பறியும் நிறுவன அதிகாரிகள் கடந்த 12 தேதி ஐந்து பேர் பாமக நிறுவனமர் மருத்துவர் ராமதாஸ் இல்லத்தை முழுமையாக சோதனையிட்டனர். தனியார் துப்பறியும் நிறுவனம் ஒட்டு கேட்பு கருவியை ஆய்வு செய்து அறிக்கை அளித்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.
அதன்படி கடந்த 15ஆம் தேதி பாமகவின் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் கிளியனூர் காவல்நிலையத்திலும், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திணகரனிடம் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இல்லத்தில் அவருடைய இருக்கைக்கு அருகே ஒட்டுகேட்பு கருவி வைத்தது யார் என்பதை கண்டறிய வேண்டும் என புகாரளித்தார்.
இதையும் படிங்க: இனியும் மாணவர்கள் மரணம் தொடரக்கூடாது... தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
தற்போது லைகா சிம் கார்டுடன் அந்த ஒட்டுகேட்பு கருவியானது கிளியனூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் ராமதாஸுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய சம்பவம் அவரது வீட்டிலேயே அரங்கேறியுள்ளது. தற்போது அவரது வீட்டில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக சென்னையை சேர்ந்த ஏசிடி வைஃபை கனெக்சன் மூலம் சிசிடிவியை சென்னையை சேர்ந்த சசிகுமார் என்பவர் ராமதாஸ் இல்லத்தில் பொருத்திருந்தார்.
இந்த நிலையில் ஒட்டு கேட்கும் கருவி யார் வைத்தது என தனியார் புலனாய்வு நிறுவனம் புலன் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் ஒருபகுதியாக வீட்டில் வேறு ஏதாவது ஒட்டுகேட்கும் கருவிகள் அல்லது ஹேக்கிங் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என சோதனையிட்டுள்ளனர். அப்போது ராமதாஸ் வீட்டில் உள்ள போன் மற்றும் சிசிடிவிக்கள் வைஃபை மூலம் ஹேக் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உதவியாளர் சுவாமிநாதன் தலைமையில் கோட்டக்கோப்பம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது டாக்டர் ராமதாஸ் வீட்டிலிருந்து வைப்பை மோடமும் கோட்டக்குப்பம் டிஎஸ்பி உமாதேவியும் ஒப்படைத்துள்ளனர். அன்புமணியின் நிதி மேலாளர் சசிக்குமார் மூலமாக தான் வைஃபை மோடமானது வைக்கப்பட்டதாகவும் அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தந்தையை உளவு பார்த்த ஒரே மகன் என் மகன்.. அன்புமணியை கடுமையாக சாடிய ராமதாஸ்..!!