• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    என்னம்மா கண்ணு செளக்கியமா?... மல்லு கட்டும் அப்பா, மகன்... மாம்பழம் Vs சிலிண்டர் லாபம் யாருக்கு?

    கட்சியின் அதிகாரம் யாருக்கு என்பதில் தொடங்கி மாம்பழத்தை முடக்க வேண்டும் என நீதிமன்றங்களின் படியேறியது வரை அனைத்துமே ராமதாசுக்கு பின்னடைவுதான்.
    Author By Amaravathi Tue, 14 Apr 2026 14:13:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ramadoss vs anbumani clash

    என்னமா கண்ணு சௌக்கியமா என்று ரஜினி சத்யராஜ் போல மல்லுக்கு நிற்கிறார்கள் தந்தையும் மகனும். தண்ணீரே இல்லாமல் தைலாபுரம் தோட்டம் வாடி வரும் நிலையில் தோட்டத்து விசுவாசிகளாக களமிறக்கப்பட்டவர்களையும் பனையூர் முகாம் கயிறு போட்டு இழுத்து வருவதுதான் பாமகவின் ஹாட் அரசியல். ராமதாஸ் அன்புமணி இடையே நடக்கும் அதிகார சண்டையில் கட்சியின் அதிகாரம் யாருக்கு என்பதில் தொடங்கி மாம்பழத்தை முடக்க வேண்டும் என நீதிமன்றங்களின் படியேறியது வரை அனைத்துமே ராமதாசுக்கு பின்னடைவுதான்.

    மேலும் தோழி தலைமையிலான மூவரணி ஏற்படுத்தி உள்ள குழப்பம், சசிகலாவுடன் கூட்டணி அமைத்தது போன்றவை ராமதாஸ் கூடாரத்தில் பூகம்பத்தையே ஏற்படுத்திவிட்டது. பாமகவின் முன்னாள் இளைஞரணி தலைவரான ஜி.கே மணியின் மகன் தமிழ்குமரன் காங்கிரஸில் ஐக்கியமாகிவிட்டார். அதை மாடலாக வைத்து தோட்டத்தின் ஆதரவாளர்கள் பலரும் வெளியேறுவது அதிகரித்து வருகிறது. இதற்கிடையே சசி ராமதாஸ் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குறிப்பாக தவெகவுடன் நம் கூட்டணியை இணைப்பேன் என்றதும்  நடக்கவில்லை. மாறாக எடப்பாடியை தோற்கடித்து அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்கின்ற தனது ஆசைக்காக கூட்டணிக்குள் ராமதாசை இழுத்து தத்தளிக்க வைத்துவிட்டார்.

    அதிரடி வியூகமாக 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணித்து அன்புமணி பங்கேற்றுள்ள அணிக்கு எதிரான ஒரு கூட்டணிக்கு ஆதரவளிக்கும் முடிவில் இருந்தார் ராமதாஸ். ஆனால் அவரின் மற்றொரு வாரிசான ஸ்ரீகாந்தி சசிகலாவுடனான கூட்டணியை சகித்து கொண்டபோதும் தேர்தல் புறக்கணிப்பு என்கின்ற முடிவை ரசிக்கவில்லை. அதன்படிதான் ராமதாஸுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவது என்று முடிவானது. 

    இதையும் படிங்க: திமுகவை விவசாயிகள் மன்னிக்கவே மாட்டாங்க..! அன்புமணி ஆவேசம்..!!

    அதற்காக பொதுச்சின்னம் பெற ஐயா பாமக என்ற கட்சியை பதிவு செய்ய முயன்றார்கள். தோழி ஆதரவாளர் பெயரிலான அக்கட்சி பதிவாகி இருப்பதால் சிலர் நம்மை மேலும் விமர்சிக்க நாமே இடமளித்ததாகிவிடும் என முடிவெடுத்து அதை கைவிட்டு விட்டனர். எனவே டாக்டர் காட்பிரே நோபுல் என்ற பாதிரியார் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்த அனைத்து இந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் என்ற அமைப்பை ஒரு பேக்கப் ஆப்ஷனாக கடைசி கட்ட தேவைக்கு என்று ஆறு மாதங்களுக்கு முன்பே டேக்கோவர் செய்து வைத்திருந்தார் ராமதாஸ். அதுதான் இப்போது அவருக்கு கை கொடுத்திருக்கிறது.

    சசிகலாவுடன் தொகுதி பங்கீட்டை முடிவு செய்யாமல் குழப்ப மனநிலையிலேயே 35 வேட்பாளர்களை அறிவித்த ராமதாஸ் ஒவ்வொருவரும் இரு மனுக்களை செய்ய வேண்டும் என்றார். அதில் 10 சசி வேட்பாளர்கள் இரண்டு ராமதாஸ் அணி வேட்பாளர்களும் அன்புமணி வேட்பாளர்களுக்கு எதிரடியாக நேரடியாக களம் காண்கின்றனர். இதன் பின்னணியில் அறிவாலயத்துடன் டீலிங் வைத்திருக்கும் தோழி அணியின் கைதான் இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் மருமகள் சௌமியாவுக்கு எதிராக தர்மபுரியில் வேட்பாளரை இறக்கியிருக்கும் ராமதாஸ் தமிழ் குமரன் போட்டியிடும் பெண்ணாகரத்தில் வேட்பாளரை நிறுத்தவில்லை.

    இப்படியாக ராமதாஸ் அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் நேரடியாக மோதிக்கொள்ளும் 12 இடங்களில் பாமக பெயர் கொடியை யார் பயன்படுத்துவது உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் கலவரங்கள் நடக்க தொடங்கிவிட்டன. இந்த கலாட்டாவுக்கு இடையே இனி ராமதாஸ் அணியில் இருந்தால் சோபிக்க முடியாது என்று உணர்ந்து அதிருப்தியில் இருப்பவர்களையும், ராமதாஸ் தரப்பு வேட்பாளர்களையும் தங்கள் பக்கம் கொக்கி போட்டு எழு இழுத்து வருகிறது அன்புமணி கூடாரம். 

    உதாரணமாக விக்ரவாண்டி தொகுதியில் புகழேந்தி என்பவரை ராமதாஸ் தன் தரப்பு வேட்பாளராக அறிவித்திருந்தார். அவர் மாஜி அமைச்சர் சி.வி. ஷண்முகத்தின் உறவினரும் கூட. ராமதாஸ் என்ற முகத்தை வைத்து அவரால் 50ஆயிரம் வாக்குகள் வரை சாதாரணமாக வாங்க முடியும். அவரால் தன் தரப்புக்கு தோல்வி என்று உணர்ந்த அன்புமணி தரப்பு புகழேந்தியை தங்கள் தரப்புக்கு பேக் செய்துவிட்டது. இதேபோல சீட் எதிர்பார்த்த ராமதாஸ் தரப்பு நெய்வேலி ஜெகன் போன்ற பலரையும் அடுத்தடுத்து தூக்கி வருகிறது. இதனால் கன்னத்தில் கைவைத்து அப்செட்டில் அமர்ந்திருக்கிறார் ராமதாஸ். இப்படியான சூழலை தங்களுக்கு சாதகமாக அறுவடை செய்ய ஆளும் தரப்பு தயாராகிவிட்டது.

    சமீபத்தில் விழுப்புரம் பரப்புரைக்கு வந்திருந்த முதல்வர் ஸ்டாலின் ராமதாசுக்கு இன்றைக்கு பலர் நம்பிக்கை துரோகம் செய்திருக்கலாம். ஆனால் நாங்கள் என்றைக்கும் அவரை சமூக நீதி போராளியாகத்தான் பார்க்கிறோம் என்று வன்னியர் ஓட்டுக்கு அடி போட்டிருக்கிறார். எந்த மகனுக்காக பல சமரசங்களை செய்தாரோ அதே மகனால் இன்று அசிங்கப்பட்டு நிற்கிறார். இப்போது ராமதாஸ் தரப்புக்கு சிலிண்டர் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதை வைத்து தற்போதைய தேர்தலில் அவரால் என்ன தாக்கத்தை ஏற்படுத்தி விட முடியும் என்பது விரைவில் தெரிந்துவிடும். 

    இதையும் படிங்க: உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்த ராமதாஸ்..! ஓடோடி சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்..!

    மேலும் படிங்க
    காலில் விழுந்தது தப்பு இல்ல… காலை வாரிவிட்டது தான் தப்பு..! எடப்பாடியை விமர்சித்த உதயநிதி..!!!

    காலில் விழுந்தது தப்பு இல்ல… காலை வாரிவிட்டது தான் தப்பு..! எடப்பாடியை விமர்சித்த உதயநிதி..!!!

    தமிழ்நாடு
    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு பெங்களூரில் "போதி விருட்ச" விருது வழங்கி கௌரவம்!

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு பெங்களூரில் "போதி விருட்ச" விருது வழங்கி கௌரவம்!

    இந்தியா
    இதுதான் நம்ம அஜெண்டா..! போலீஸ் மற்றும் அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதிகளை அறிவித்த விஜய்..!

    இதுதான் நம்ம அஜெண்டா..! போலீஸ் மற்றும் அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதிகளை அறிவித்த விஜய்..!

    தமிழ்நாடு
    "சோறு போடும் தெய்வங்கள்"..! விவசாயிகளுக்கான வாக்குறுதிகளை அறிவித்த விஜய்..!!

    "சோறு போடும் தெய்வங்கள்"..! விவசாயிகளுக்கான வாக்குறுதிகளை அறிவித்த விஜய்..!!

    தமிழ்நாடு
    பீகாரில் 21 ஆண்டுகால நிதிஷ் குமார் ஆட்சி முடிவு! பாஜகவின் சாம்ராட் சௌத்ரி புதிய முதலமைச்சர் நாளை பதவி ஏற்பு!

    பீகாரில் 21 ஆண்டுகால நிதிஷ் குமார் ஆட்சி முடிவு! பாஜகவின் சாம்ராட் சௌத்ரி புதிய முதலமைச்சர் நாளை பதவி ஏற்பு!

    இந்தியா
    திருப்பூரில் விஜய்..! சிறு குறு தொழில்கள், நெசவாளர்களுக்கான மாஸ் வாக்குறுதிகள் அறிவிப்பு..!!

    திருப்பூரில் விஜய்..! சிறு குறு தொழில்கள், நெசவாளர்களுக்கான மாஸ் வாக்குறுதிகள் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    காலில் விழுந்தது தப்பு இல்ல… காலை வாரிவிட்டது தான் தப்பு..! எடப்பாடியை விமர்சித்த உதயநிதி..!!!

    காலில் விழுந்தது தப்பு இல்ல… காலை வாரிவிட்டது தான் தப்பு..! எடப்பாடியை விமர்சித்த உதயநிதி..!!!

    தமிழ்நாடு
    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு பெங்களூரில்

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு பெங்களூரில் "போதி விருட்ச" விருது வழங்கி கௌரவம்!

    இந்தியா
    இதுதான் நம்ம அஜெண்டா..! போலீஸ் மற்றும் அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதிகளை அறிவித்த விஜய்..!

    இதுதான் நம்ம அஜெண்டா..! போலீஸ் மற்றும் அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதிகளை அறிவித்த விஜய்..!

    தமிழ்நாடு

    "சோறு போடும் தெய்வங்கள்"..! விவசாயிகளுக்கான வாக்குறுதிகளை அறிவித்த விஜய்..!!

    தமிழ்நாடு
    பீகாரில் 21 ஆண்டுகால நிதிஷ் குமார் ஆட்சி முடிவு! பாஜகவின் சாம்ராட் சௌத்ரி புதிய முதலமைச்சர் நாளை பதவி ஏற்பு!

    பீகாரில் 21 ஆண்டுகால நிதிஷ் குமார் ஆட்சி முடிவு! பாஜகவின் சாம்ராட் சௌத்ரி புதிய முதலமைச்சர் நாளை பதவி ஏற்பு!

    இந்தியா
    திருப்பூரில் விஜய்..! சிறு குறு தொழில்கள், நெசவாளர்களுக்கான மாஸ் வாக்குறுதிகள் அறிவிப்பு..!!

    திருப்பூரில் விஜய்..! சிறு குறு தொழில்கள், நெசவாளர்களுக்கான மாஸ் வாக்குறுதிகள் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share