பட்டியலின மக்களை கோயிலுக்குள் நுழையவிடாமல் தடுப்பது தீண்டாமை என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மாத்தூரில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவில் தங்களையும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த சுந்தர் என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, கடந்த 1947ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஆலயப் பிரவேசச் சட்டத்தின்படி, சாதியின் அடிப்படையில் ஒருவர் கோயிலுக்குள் நுழைவதைத் தடுக்க முடியாது எனத் தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க: 5 தொகுதி இடைத்தேர்தல் விவகாரம்: செப்.8 வரை தடை நீட்டித்தது சென்னை ஹைகோர்ட்!!
மேலும், சாதியின் அடிப்படையில், குறிப்பாக பட்டியலின மக்களை கோயிலுக்குள் நுழையவிடாமல் தடுப்பது தீண்டாமைக் குற்றமாகும் என்றும், அவ்வாறு தடுப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதையடுத்து, வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: நடிகர் பார்த்திபன் தாக்கல் செய்த மனு.. தமிழக அரசிடம் பதில் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம்!!