நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசியலில் இலவசங்கள் என்ற கலாச்சாரத்தை கடுமையாக எதிர்த்து வருபவர். அவர் இலவசங்களை ஒரு ஏமாற்று வேலையாகவும், மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றும் திட்டமாகவும், மாநிலத்தின் பொருளாதாரத்தை சீரழிக்கும் வீழ்ச்சித் திட்டமாகவும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்டவை பல ஆண்டுகளாக மிக்சர், கிரைண்டர், லேப்டாப், பண உதவி, பேருந்து இலவசம் போன்றவற்றை அறிவித்து வாக்குகளைப் பெறுவதாக சீமான் குற்றம் சாட்டுகிறார். இந்த இலவசங்கள் மக்களின் உழைப்பு மற்றும் கௌரவத்தை குறைத்து, அவர்களை அரசியல் கட்சிகளின் பிச்சைக்கு அடிமையாக்குவதாக அவர் வாதிடுகிறார்.

சீமானின் கருத்துப்படி, இலவசங்கள் கொடுப்பதன் மூலம் அரசுகள் வரி வசூலை அதிகரிக்கின்றன. மின்சாரக் கட்டணம், சொத்துவரி, வாடகை உயர்வு போன்றவற்றின் வடிவில் மக்களிடமிருந்தே பணத்தை எடுத்து, அதையே இலவசமாக திருப்பிக் கொடுப்பதாக அவர் விளக்குகிறார். இது உண்மையான வளர்ச்சியல்ல, மாறாக மாநிலத்தின் கடன் சுமையை அதிகரித்து, எதிர்கால சந்ததியினருக்கு பெரும் பாரமாக மாறும் என்று அவர் தெரிவிக்கிறார்.
இதையும் படிங்க: நெருங்கிய தேர்தல்..! காரைக்குடியில் குழப்பம்..! சீமான் vs கரும்பு விவசாயி சின்னம்..!
இந்த நிலையில் திருவற்றியூர் பகுதியில் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தான் ஓசி பஸ் கொடுக்க மாட்டேன் என்றும் காசு கொடுத்து போ எனவும் தெரிவித்தார். ஏசி பஸ் தருகிறேன் என்றும் காசு கொடுத்துப் போக வேண்டும் எனவும் கூறினார். ஊசி பஸ்ஸில் போறவன் ஓட்டு வேண்டாம் என்று கூறினார். இலவசங்கள் கொடுப்பதையும் சாடினார்.
இதையும் படிங்க: #BREAKING: EPS வேட்பு மனு ஏற்பு..! சீமான், மா.சு., சேகர்பாபு மனுக்களும் ஏற்பதாக அறிவிப்பு..!