வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
அரசியல் ›

பெரியாரை ஏற்றுக்கொள்ளும் தம்பிகள் என்னை விட்டு விலகிச் செல்லலாம் – கொந்தளித்த சீமான் …!

பெரியாரை ஏற்றுக் கொள்பவர்கள் யாராக இருந்தாலும் நாம் தமிழர் கட்சியை விட்டு செல்லலாம் என சீமான் தெரிவித்துள்ளார்.

பெரியார் குறித்து சீமான் பேசிய சர்ச்சை கருத்துக்கள் ஏற்கனவே தமிழகத்தில் பரபரப்பை கிளப்பி வரும் நிலையில், பிரபாகரனை பெரியாரை ஏற்றுக் கொண்டாலும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று பெரியாரை ஏற்றுக்கொள்ளும் நாம் தமிழர் கட்சியினர் கட்சியை விட்டு விலகலாம் என்றும் பேசி இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரபாகரன் உள்ளிட்ட உலகத்தில் யார் பெரியாரை ஏற்றுக் கொண்டாலும் நான் பெரியாரை ஏற்றுக்கொள்ள மாட்டேன். என்னுடைய தம்பிகளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பெரியாரை ஏற்றுக்கொள்ளும் என்னுடைய தம்பிகள் என்னை விட்டு விலகி செல்லலாம்  என்றார்.

இதையும் படிங்க: திமுக காசு, பணம் கொடுத்தும் சீமானுக்கும் நோட்டாவுக்கும் இவ்ளோ ஓட்டு.. திமுக எதிர்ப்பு ஓட்டுகள் பற்றி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வியப்பு.!

ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக வாக்குகள் அனைத்தும் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்தது எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதது நாங்கள் வாங்கிய அனைத்து வாக்குகளும் நாம் தமிழர் கட்சிக்காக மக்கள் அளித்த வாக்குகள்.

ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என எல்லா கட்சிகளுமே தேர்தல்களில் வைப்புத் தொகையை இழந்துள்ளார்கள். அந்த வரலாறு தமிழகத்தில் நடந்துள்ளது.

பெரியார் குறித்து சீமானின் கருத்து கொஞ்சம் ஓவராக போய்விட்டதாக அண்ணாமலைக் கூறிய கருத்துக்கு இப்பொழுது தான் தொடங்கியுள்ளேன் இன்னும் போகப்போக நிறைய உள்ளது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: டெபாசிட் போனாலும் வாங்கு வங்கியை இரண்டு மடங்கு உயர்த்திய நாதக… ஈரோடு கிழக்கில் உயரும் நாதக கிராஃப்.!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी