திருப்பூர் யூனியன் மில் சாலையில் நாம் தமிழர் கட்சியின் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. அதில் தொழிற்சாலைகள் மூலமாக தமிழகம் மாசு நிறைந்து உள்ளதாகவும் அதிலிருந்து விவசாயம் சார்ந்த தொழில்கள் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் எனத் தெரிவித்தார். தரமான கல்வி மருத்துவம், குடிநீர் உள்ளிட்டவை கட்டணம் இன்றி வழங்கப்படும். அதேபோல் நல்ல சாலைகள், தரமான சேவைகள், இடை நிறுத்தா மின்சாரம் என வழங்கப்படும்.
அனைத்தும் பணம் தான், எனக்கு ஓட்டு போடவில்லை என்றாலும் பரவாயில்லை மறந்தும், சூரியன், இரட்டை இலை தாமரையில் போட்டு விடாதீர்கள். படத்துக்கு கூட போய் தூங்கி விடுங்கள். தொழிற்சாலை கழிவுகள் ஆற்றில் கலக்கிறது. அதனை அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்கள். ஆமாம். கலக்கிறது என்பதை பார்த்து விட்டோம் என சொல்லிச் சென்று விடுகிறார்கள். இந்த தேர்தலில் இரண்டே போட்டி தான் நமக்கு பிரச்சனை கொடுத்தவர்கள் ஒரு பக்கம், நாம் ஒரு பக்கம்.
வந்தவன் எல்லாம் இலவசம் என சொல்லி அந்தப் பக்கம் நிற்கிறார்கள். நான் இலவசம் தர மாட்டேன். என் ஆட்சியில் ஓசி பஸ் இல்லை, ஏசி பஸ் விடுவேன் அதுவும் கட்டணம் தான். இலவச மின்சாரம் வழங்குவேன். ஆனால் வீட்டை பூட்டி வெளியே சென்றாள் மின்விசிறி விளக்குகளை அனுப்பீர்களா பொறுப்பற்று போகும் என்பதால் தரமான சேவைகள் கட்டணத்தில் தான் தரப்படும். இளைஞர்களுக்கு முழு வேலை வாய்ப்பை வழங்குவேன். வடநாட்டு தொழிலாளர்கள் வரவேண்டிய அவசியம் இல்லாமல் செய்வேன். மதுக்கடையை மூடுவேன். மாவட்டம் தோறும் தொழில் பயிற்சி நிலையங்கள் உருவாக்கி பயிற்சி கொடுப்பேன்.
இதையும் படிங்க: "தீயசக்தி திமுக"... சிறுவர்களை வைத்து பிரச்சாரம்... தவெக நிர்வாகி மீது FIR..!!
உட்கார்ந்து சாப்பிட என் ஆட்சி இல்லை, உழைத்து சாப்பிடவே என் ஆட்சி. கள் மது இல்லை, அதனை மக்கள் குடிக்கலாம். என் ஆட்சியில் கள் இறக்கி அதற்கு பனம்பால் தென்னம்பால் என பெயர் மாற்றி வைப்பேன். தமிழ் படித்தால் தான் அரசு வேலை, அரசு பள்ளியில் படிப்பவர்களுக்கு தான் வேலை நான் சொல்வதுதான் புரட்சி புரட்சி என்பது தலைகீழாக மாற்றுவது, அனைவரும் சைக்கிளில் தான் செல்ல வேண்டும். நானே சட்டத்தவைக்கு சைக்கிளில் தான் செல்வேன். தலைவர்கள் எல்லாம் இசட், ஒய் பிரிவு பாதுகாப்பு கேட்கிறார்கள். தலைவன் தான் மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும். தலைவனுக்கு எதற்கு பாதுகாப்பு. உன்ன எவன்டா வரச் சொன்னான்.
நடிகன் ஒருவன் சொல்கிறான். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என்று, அவனுக்கு நிச்சயம் இல்லாததால் இரண்டு தொகுதியில் நிற்கிறான். இதில் டிஎம்கே டிவிகே-க்கு தான் போட்டி என்று பேசுகிறார்கள் ஆனால் 2000க்கும் 2500க்கு தான் போட்டி. பிராந்திக்கு வீரன் என பெயர் வைக்கிறார்கள் அப்படி என்றால் வீரபாண்டிய கட்டபொம்மன் பாக்சிங் சுபாஷ் சந்திர போஸுக்கு குவாட்டர் என பெயர் வைத்து விடலாமா?. திராவிட குப்பையை தூக்கிப் போடுங்கள். உதயசூரியனுக்கு வாக்களித்தீர்கள், அவர்கள் வீட்டில் விடிந்து விட்டது, தமிழகம் இருண்டு விட்டது. இரட்டை இலைக்கு ஓட்டு போட்டீர்கள் அது துளிரும் எனப் பார்த்தோம் மொட்டையாகி போச்சு. விசில் தியேட்டரில் ஓதி கிடந்தார்கள் இப்போது தெருவில் ஓதுகிறார்கள் எனவே விவசாய சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றார்.
இதையும் படிங்க: “ஜோசப் விஜய் ஒரு நீர்க்குமிழி; புறக்கணிக்க வேண்டிய சக்தி...” - வெளுத்து வாங்கிய சிபிஐ சண்முகம்...!