நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தேனியைச் சேர்ந்தவர் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக சீமான் பேசியதாக கூறி 80 இன்ஸ்டகிராம் மூலம் மிரட்டல்
சீமானின் தலை விரைவில் துண்டிக்கப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாதக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவை நாம் தமிழர் கட்சி பிரமுகர் இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்டோர் கொடுத்தனா்.

அந்த புகாரில் சமூக வலைத்தளங்களில் சீமானுக்கு எதிராக கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகிறது. தேனியை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனது வலைத்தள பக்கத்தில் சீமானின் தலை துண்டிக்கப்படும். மேலும் விரைவில் நாம் தமிழர் கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்படுவார் என குறிப்பிட்டு மிரட்டல் விடுத்து இருந்தார். சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த தேனியை சேர்ந்த சந்தோஷ், அவரது பதிவை ரீ போஸ்ட் செய்த 4 பேர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக இடும்பாவனம் கார்த்திக் தனது வலைத்தள பக்கத்தில்," அண்ணன் சீமான் அவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட அடையாளமில்லா உதிரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தோம்" என பதிவிட்டுள்ளார்.

இதனைக் கண்டித்துள்ள சீமானின் ஆதரவாளர்கள், ''அண்ணன் சீமான் தலையை வெட்டுவேன், கொலை செய்வேன் என்று மிரட்டவது உங்கள் நிலத்தில் அல்ல, தமிழர் நிலத்தில் என்பதை மறந்துவிடாதீர்கள். தமிழர் நிலத்தை தமிழன் ஆள வேண்டுமென சீமான் பேசுவது ஜனநாயகமானது என்பதை இங்கு வாழும் தெலுங்கர்கள் புரிந்துக்கொள்ளுங்கள்'' என பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திமுகவில் பொன்முடி, செந்தில் பாலாஜி விக்கெட்டுகள் காலி.. இனி தொடர்ந்து விக்கெட்டுகள் விழும்.. ஹெச். ராஜா தாறுமாறு!