நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கோவில்பட்டியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, மக்களின் வாக்குறுதி நம்பிக்கை குறித்து கடுமையான விமர்சனம் செய்தார்.
சீமான் பேசுகையில், “டோக்கனும் 8 ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்பதை நம்புகிறாய். 10 ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்பதை நம்புகிறாய். பிரிட்ஜ் தருகிறேன், தாலிக்கு ஒரு பவுன் தங்கம் தருகிறேன், 2 ஆயிரம் ரூபாய், 2500 ரூபாய் தருகிறேன் என்பதையெல்லாம் நம்புகிறாய்.
ஆனால் நான் வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர் தருகிறேன் என்றால், ஒவ்வொரு குடும்பப் பெண்ணுக்கும் ஒரு கிலோ தங்கம் தருகிறேன் என்றால் சிரிப்பு வருகிறது. ஏன் சிரிக்கிறாய்? கேவலமாக இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: இதுமட்டும் நடந்துட்டா! தேர்தல்ல இருந்தே விலகிடுறேன்!! பாஜக, காங்., கட்சிகளுக்கு சீமான் சவால்!
மேலும் அவர் கூறியதாவது: “நான் படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை தருகிறேன் என்று சொல்கிறேன். எப்படி தருகிறேன் என்றும் விளக்குகிறேன். ஆனால் அதை நீ நம்புவதில்லை. உலக நாடுகளில் எப்படி ஆட்சி நடக்கிறது, எப்படி பொருளாதாரத்தை மீட்டெடுக்கிறார்கள் என்று சொல்கிறேன்.

உன் பிள்ளை சொல்கிறான் என்றாலும் நம்புவதில்லை. வந்தவன், போனவனை மட்டும் நம்புகிறாய். உன் வயிற்றில் இருந்து வந்தவனை நம்புவதில்லை. அங்கேதான் பிரச்னை இருக்கிறது” என்று உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்.
சீமானின் இந்தப் பேச்சு, கோவில்பட்டி பிரசார மேடையில் பெரும் கவனத்தை ஈர்த்தது. மற்ற கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளை கடுமையாக விமர்சித்த அவர், தன் கட்சியின் கொள்கைகளை மக்கள் நம்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும் வேளையில், சீமானின் இந்த உரை மக்களிடையே பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. சிலர் அவரது நேரடியான பேச்சு பாணியைப் பாராட்டினாலும், சிலர் வாக்குறுதிகளை ஒப்பிட்டுப் பேசிய விதத்தை விமர்சித்தனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைவரின் இந்தப் பேச்சு, தமிழக அரசியல் களத்தில் புதிய பேச்சுக்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: ஏன் என் வீட்ல ரெய்டு நடக்கலை?! பயப்படுற ஆளு மாதிரி தெரியுதா?! சேட்டை காட்டிருவியா நீ? சீமான் ஆவேசம்!