அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரது மகன் நினைவாக ஆர்ஜே தமிழ்மணி சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் பொதுமக்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, ஆறுபடை வீடு கொண்ட முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் நடைபெறக்கூடிய குடமுழுக்கு விழாவிற்கு உள்ளூர் விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கூறினார். இது மதுரை மக்களின் பக்த கோடிகளின் வேண்டுகோள் தான் என்றும் தமிழக முழுவதும் இன்று பேசு பொருளாக இருப்பவர் திருப்பரங்குன்றம் முருகன்தான். திருப்பரங்குன்றம் கோவிலில் திருமணம் நடைபெற்றால் மணமக்களுக்கு இடையே பிரிவினை ஏற்படாது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: விறுவிறு தேர்தல்.. இபிஎஸ் தலைமையில் தொடங்கிய மாவட்டச் செயலாளர் கூட்டம்..!
அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று கூறியதற்கு பதில் அளித்த செல்லூர்ராஜூ, இதுகுறித்து ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி விரிவாக கருத்து சொல்லிவிட்டார். தமிழக அரசின் செயல்பாடுகளில் தேக்க நிலை இருப்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். கூட்டணி குறித்தும் ஆட்சி அமைப்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கூறிவிட்டார். தமிழக மக்களின் மனநிலை என்ன என்பதை அறிந்து செயல்படக்கூடியவர் எடப்பாடி பழனிசாமி. அவரது பயணம் மக்கள் வெள்ளத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்ன சொல்கிறாரோ அதுதான் வேத வாக்கு. எடப்பாடி சொன்ன பிறகு அதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை அவருக்கு எல்லாமே தெரியும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மதுரை மண்ணில் மாநாடு வைத்தால் வெற்றி கிடைக்கும் என்பது அனைத்து கட்சியினரின் நினைப்பு. அதனால் தான் அரசியல் கட்சிகளின் கவனம் மதுரையை நோக்கி இருக்கிறது. மதுரையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறுவது நிச்சயம். அதுதான் எங்களுடைய திட்டம். மீண்டும் அதிமுக தான் வெற்றி பெறும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்" என்று அடித்துக்கூறினார்.

இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியின் 2-வது மாநில மாநாட்டை ஆகஸ்டு மாத இறுதியில் நடத்த விஜய் முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் இடம் தேர்வு பணி நடந்து வந்தது. மதுரையில் மாநாடு நடத்துவதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த செல்லூர் ராஜு, மதுரை மண்ணை மிதித்தால் வெற்றி கிடைக்கும் என எல்லோரும் நினைக்கிறார்கள்; மக்கள் எழுச்சியாக வந்தால்தான் வெற்றி கிடைக்கும்; அழைத்து வந்தால் பயனில்லை என தெரிவித்தார்.
இதையும் படிங்க: முழு சங்கி இபிஎஸ்... பதறிப் போயிட்டாப்ல..! உதயநிதி விமர்சனம்..!