செங்கோட்டையன் உடைய அண்ணன் கே.காளியப்பனுடைய மகன் செல்வன் திமுகவிலிருந்து விலகி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திடைய பொது செயலாளரும் சட்டமன்ற தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்துக்கொண்டார்.
அதிமுகவில் தனது 52 ஆண்டு கால பயணத்தை முடித்துக்கொண்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். த.வெ.க நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர் திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கான அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் இணைந்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்ததையடுத்து, அவரது தீவிர ஆதரவாளரான திருப்பூர் முன்னாள் எம்.பி. சத்தியபாமா தன்னையும் தவெகவில் இணைத்துக் கொண்டார். அதேபோல் அதிமுகவில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்த ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளராக இருந்த கந்தவேல் முருகன், நம்பியூர் அதிமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், கோபி மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த குறிஞ்சிநாதன், முன்னாள் யூனியன் தலைவர்கள் மௌனீஸ்வரன் பி முத்துசாமி அத்தாணி பேரூர் கழக செயலாளராக இருந்த ரமேஷ் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இதையும் படிங்க: நிர்வாக சீர்கேடு, சுகாதார சீர்கேடு... எதையுமே கண்டுக்கல... திமுகவை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு...!

இதனையடுத்து அதிமுகவில் அதிருப்தியில் இருக்கக்கூடிய பல முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் செங்கோட்டையன் மூலமாக தவெகவிற்குள் பிரவேசிப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில், தற்போது அனைவருக்கும் அதிர்ச்சி தரும் விதமாக செங்கோட்டையன் வீட்டிற்குள்ளே எடப்பாடி பழனிசாமி குண்டு வீசியிருக்கிறார்.
செங்கோட்டையன் உடைய அண்ணன் கே.காளியப்பனுடைய மகன் செல்வன் திமுகவிலிருந்து விலகி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திடைய பொது செயலாளரும் சட்டமன்ற தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளார்.
திமுகவில் சுற்றுசூழல் அணியில் மாவட்ட பொறுப்பில் இருந்து செல்வம் அந்த கட்சியிலிருந்து விலகி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவரோடு இன்றைக்கு சென்னை பசுமை வழி சாலையில் இருக்கக்கூடிய அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியுடைய முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் அதிமுகவினுடைய வளர்ச்சிக்காக மிகப்பெரிய அளவில் கே. காளியப்பன் பங்கேற்றிருக்கிறார். தற்போது அவருடைய மகன் திமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்திருப்பது கூடுதல் பலமாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: திமுக கரைவேட்டிகள் கம்பி என்ன போவது உறுதி... இபிஎஸ் திட்டவட்டம்...!